பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாலோர் வாணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்டுப் பெரிய நகரங்களில் வாழ்ந்தனர்!

அவர்கள் எளிய வாழ்வின் பண்பை அறிந்திருந்தனர். ஆயினும், ஏழடுக்கு மாளிகையிலும், பட்டு மஞ்சத்திலும் பொன்னணி மணி யாடை புனைந்து ஒய்யார வாழ்வே வாழ்ந்தனர். ஒரு சில துறவிகள் வலிந்து மேற்கொண்ட வறுமையன்றி,பொருளியல் சார்ந்த வறுமை தமிழகத்தில் அன்று இல்லை-தமிழகம் சூழ்ந்த நாடுகளில்கூட அன்று கிடையாது. அது தமிழகத்துக்குத் தொலைவிலிருந்து பின்னாள்களில் வந்த அயலுலக இறக்குமதிச் சரக்கேயாகும்.

'தமிழர் அன்றுஇன்றுபோல்' அடுக்களைப் பூச்சிகளாகவோ உள்நாட்டுப் பூச்சிகளாகவோ இராமல், உலகெலாம் சென்று வாணிகம், தொழில், கலை, குடியேற்றம், அரசு ஆகியவை பரப்பினர்.

கீழைஉலகில் தமிழகத்துக்கு மட்டுமே, எகிப்தியர், ஃபினீஷியர்,கிரேக்கரைப்போலக் கடற்படை இருந்தது.பதிற்றுப் பத்திலும் பரிபாடலிலும்,பிற சங்கஇலக்கியங்களிலும், காணும் கடற்போர், கடல் வாழ்வுக் குறிப்புகளைப் போல, தமிழ் தவிர்த்த ஏனைய பண்டைய உலக மொழி இலக்கியங்களிலோ, தற்கால உலகமொழி இலக்கியங்களிலோகூட எதுவும் காணமுடியாது.

3.கல்வியைப் பரப்ப இன்று மேனாட்டு நாகரிக வாய்ப்புகள் எண்ணற்றவை ஏற்பட்டுள்ளன. பண்டைத் தமிழருக்கு இவ்வாய்ப்பு மிகமிகக் குறைவே-சீனம் கண்ட அச்சுத் தொழிலும், சீனமும் வட இந்தியாவும் பயன்படுத்திய தாளும்கூடப் பண்டு இங்கு இல்லை. பனை ஓலை கடந்து தமிழர் இத் துறை ஒன்றில் மட்டும் தாமாக முன்னேறவே இல்லை! ஆயினும், தமிழர் கல்வியில் அடைந்த முன்னேற்றம் வியப்புக்குரியது. அன்றைய உலகம் மட்டுமல்ல, இன்றைய உலகமும், இன்றைய அறிஞரும் காணாதது. அது 'கண்ணின்றிக் காண்பவன் திறம், அரங்கின்றி வட்டாடிய திறம்' என்னலாம்.

இது வகையில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள் எவை? இன்று நாம் அல்லது உலகம் அவற்றைப் பயன்படுத்தினால், அவர்களைக் கடந்து வளர முடியும் என்பதில் ஒரு சிறிதும்