பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 அப்பாத்துரையம் - 1 கண்டிக்கப்படும் கொள்கைகளில், இன்றைய மேனாடுகளும் கண்டு வியக்கத்தக்க புத்தம் புதிய இயக்க, எதிர் இயக்கக் கருத்துகளை-ஹீடனிசம், இப்சனிசம், மார்க்சிசம், சோஷலிசம், ராஷனலிசம் ஆகிய அத்தனையையும்-தமிழகத்தின் பகுத்தறி வியக்கம், தன்மான இயக்கம் ஆகியவற்றையும்-நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகக் கண்டன வடிவத்திலாவது காண்கிறோம்! அந் நாத்திகத்தைக் கண்ட முதல்வர் பிருகஸ்பதி, கபிலர், கணநாதர் ஆகியோர் பின்னாளில் ரிஷிகளுடன் சேர்த்து எண்ணப்பட்டனர். நாத்திகத்தின் முடிசூடா மன்னர் பிருகஸ்பதி ஒரு ரிஷியாக்கப்படவில்லை-தேவனாகக்கூட ஆக்கப்படவில்லை- ஒரு பகவான் ஆனார்-பகவான் என்று முதல் முதல் அழைக்கப் பட்டவர் அவரே. ஒரு நாத்திக முதல்வர் மட்டுமன்றி, நாத்திகர் வேதம், வேதாந்தம், சாத்திரங்கள் எல்லாம்-ஒரு முழு உலக இலக்கியமே இருந்ததாகத் தெரியவருகிறது! நேரு இது கண்டு வியக்கிறார்; ஒரு கணநேரம் அவர் பாரதக் கனவின் ஒளியிடையே நிழலாக அல்லது பாரதக்கனவின் நிழலிடையே ஒளியாக அது குறுக்கிடுகிறது. நேரு கண்ட மின்னொளியை ஆராய்ந்து விளக்குகிறார் மற்றொரு வடநாட்டு அறிஞர், எம்.என்.ராய் தம் ‘பொருளியல் வாதம்' (Materialism) என்ற நூலில்! உலகங் கடந்து இந்தியாவும், இந்தியா கடந்து தமிழகமும் நாகரிகத்திலும், சமய, அறிவு, கலைத்துறைகளிலும் முற்பட்டு முன்னேறியதற்குரிய உயிர்க் காரண விளக்கம் இதுதான்-இந்த நாத்திகர் பொது ஆராயா நம்பிக்கைகளை-பழக்க வழக்கங்களை- பழங்கொள்கைகளை எதிர்த் தெதிர்த்து எல்லாவற்றையும் உள்ளூர அறிவுப் பண்பாக மாற்றிவந்தனர். இவர்கள் பெயர்களுள் ஒருசிலவே-சித்தர் முனிவர் பெயர்களாக-நமக்குக் கட்டுக்கதை வடிவில் வந்து எட்டியுள்ளன. ஒருவர் நூலேனும், வாசகமேனும் நேரடியாக நமக்கு வந்து சேரவில்லை. அவர்களும் அவையும் இருட்டடிக்கப் பட்டன. ஆனால், அவர்கள் பண்பு இருட்டடிக்கப்படவில்லை. எதிர்த்தவர்களே கொள்கைகளையும் பண்புகளையும் கொண்டு நமக்குத் தந்துவிட்டுப் போயுள்ளனர். நம் இடைக்காலத் தேசிய