பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2. முற்கால, பிற்காலத் தமிழ் வழங்கும் எல்லைகள்

   தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், தமிழ் எனப் பலவாகக் கூறப்படும் மொழிகள் உண்மையில் 'தமிழ்' என்ற ஒரே அடிப்படை மொழியின் வகைத் திரிபுகளே. இதனைப் புலவருலகம் ஊன்றிக் கவனித்தல் வேண்டும்.ஏனெனில், தமிழகத்துக்கு மட்டுமன்றி உலகுக்கே பயன்படத்தக்க பல ஆராய்ச்சித் துறைகளுக்கு இது தூண்டுகோலாகத் தக்கது. இது வகையில் மொழி, தமிழ் நாட்டெல்லை ஆகியவை பற்றிய கீழ்வரும் செய்திகளை அறிஞர் உலகம் கவனித்தல் வேண்டும்.
  இன்று 'தமிழ்நாடு' என்ற சொல் இந்திய உபகண்டத்தில் தமிழ் பேசப்படும் ஒரு பகுதிக்கு மட்டுமே வழங்கப் பெறுகிறது.
  ஆயினும் பழந்தமிழகம் இதுமட்டுமன்று. அரசியல் துறையில் விழிப்புற்ற தமிழர் தென் திருவாங்கூர் பகுதி தமிழகமே என்பதைச் சுட்டுகின்றனர். ஆனால், திருவாங்கூர், கொச்சி முழுவதிலுமே, சிறுபான்மையாகவோ, பெரும்பான்மையாகவோ தமிழரில்லாக் கூற்றங்கள் (தாலுக்காக்கள்) இல்லை. இத் தமிழர் குடியேறிய தமிழர்கள் அல்லர். பண்டைப் பழந்தமிழ்க் காலத்திலிருந்து மாறுபடாதிருந்து வரும் எஞ்சியுள்ள பழந்தமிழரே என்பதை அரசியல் சார்ந்த இன்றைய எக்கட்சியினரும் கவனிப்பதில்லை.
  புத்த மதத்தின் மூலம் வடநாட்டுப் பண்பாடு புகுந்து சிங்களமொழி வேறுபடுவதற்கு முன்னிருந்தே, இலங்கை தமிழகமாயிருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்னும் வட இலங்கை தமிழ் நாட்டைவிடத் தொன்மை மிக்க தமிழக மாகவே இருந்து வருகிறது. ஈழ நாட்டாராகிய வட இலங்கைத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து குடிபுகுந்தவருமல்லர். தமிழ் நாட்டுத் தமிழர்