குடியாட்சி
87
படைத் தலைவரா யிருந்ததுடன் அமையாமல் அரிய அரசியல் அமைப்பாளராகவும் மாறி 1787-இல் அமெரிக்க விடுதலை விளம்பரம் என்ற பேருரிமைத் தாளை வெளிட்டார். அமெரிக்கா நாடுகளின் தனிப் பண்புகளுக்குக் கேடின்றி ஒற்றுமை குலையாத ஒரு தனிப்பட்ட அரசியல் முறையை அவர் அதில் வகுத்து அமெரிக்காவின் முதல் தலைவராக உலகில் பெரும்புகழ் பெற்றார்.
அமெரிக்கா நாட்டில் ஆங்கிலேயர்கள் குடியேறிய காலம் எலிசபெத், முதல் ஜேம்ஸ் ஆகியவர்கள் ஆட்சிக் காலம் ஆகும். நாம் ஏற்கனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி ஆங்கில நாட்டு அரசியல் வளர்ச்சி அதற்கு நெடுநாள் முன்னரே தொடங்கி முன்னேற்ற மடைந்து வந்தது. புத்தம் புதிதாக அரசியல் முறை வகுக்கத் துணிந்த அமெரிக்கப் புதுக் குடிமக்களுக்கு இது ஒரு முன்மாதிரியா யிருந்ததென்பது எதிர்பார்க்கத் தக்க இயல்பேயாகும். உண்மையில் அரசியலமைப்பிற்கான ஒழுங்குத் திட்டங்கள் வகுக்க முற்பட்ட அமெரிக்க நாட்டுத் துணைத் தலைவரான தாமஸ் ஜெப்பெர்சன்(Thomas Jefferson) என்பவர் ஆங்கில அரசியல் மன்ற நடவடிக்கைப் பதிவேடுகளையே அவ்வகையில் பெரிதும் பின்பற்றினார். ஆங்கில நாட்டைப் போன்றே அமெரிக்காவிலும் இரண்டு அவைகள் ஏற்பட்டதும் ஆங்கில நாட்டைப் போன்றே தேர்தல் முறைகள், சட்டங்கள் அமைக்கும் குழு, உட்குழு நடை முறைகள் ஆகியவைகள் ஏற்பட்டதும் இதனாலேயே யாகும். ஆயினும் இவ் வேற்றுமை பெரும்பாலும் மேற்போக்கான ஒற்றுமைகளேயாகும். அரசியலமைப்பை உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு ஒற்றுமைகளைவிட உள்ளார்ந்த வேற்றுமைகளை மிகுதி என்பது தெரியவரும்.
இதற்குக் காரணங்கள் பல உண்டு. மேற் குறிப்பிட்ட மாறுபட்ட சூழ்நிலைகள், காலநிலைகள் ஆகியவை அவற்றுள் சில. மேலும் அமெரிக்கக் குடியேற்றம் ஏற்பட்ட காலம் ஆங்கில அரசியல் பயிற்சிப் பருவத்திலேயிருந்த காலம். முதல் சார்ல்ஸ் காலத்து அரசியலுரிமைப் போரும் மூன்றாம் வில்லியம் காலத்துப் புகழ்மிக்க புரட்சியும் அதன்பின் ஹானோவரியர் ஆட்சிக் காலமுதல் தொடங்கிய அமைச்சர் குழுப்