குடியாட்சி
89
இந்நிலை ஏற்படவில்லை. காரணம் அமெரிக்கர் அரசியல் அமைப்பு ஏற்படுத்தும் காலத்தில் இங்கிலாந்திலும் அந்நிலை ஏற்படவில்லை என்பதே. மேலும் இந்நிலை பிற்காலத்திலும் ஏற்படுவதற்குப் பெரிய தடை ஒன்று உண்டாயிற்று. இம்மூன்று துறைகளும் தனித்தனி ஒன்றுடனொன்று சார்பற்று இருப்பதே உயர்வுடையது என்று மாண்டிஸ்க்யூ(Montesquieu) என்ற அறிஞர் கூறியிருந்தார். அமெரிக்கரிடையே இக்கருத்து வேரூன்றிச் செல்வாக்குப் பெற்றது. ஆங்கில ஆட்சியினின்று விடுபட்ட தறுவாயில் தனி மனிதனாட்சி மீது மக்கள் மனக்கொதிப்பு மிகுதியாயிருந்தது. அமெரிக்காவில் தனிமனிதர், எவர் கையிலும் முழு உரிமைகளும் போய்விடாமல் பாதுகாக்க இந்நிலை உதவும் என அவர்கள் கருதினர்.
இங்ஙனமாக அமெரிக்காவின் அரசியலில் அரசியல் நடைமுறைத் துறைக்குத் தலைவர் நாட்டுத்தலைவர்(President); அவர் தலைமையின் கீழிருந்து அமைச்சரும் அரசியல் பணியாளரும் ஆட்சியை நடத்தினர். சட்டம் அமைக்கும் துறை காங்கிரஸ்(Congress) என்றழைக்கப்படும் அரசியல் மன்றின் இரண்டு அவைகளினிடமும் அவற்றின் அவைத்தலைவர் கையிலும் அமைந்திருந்தது. சட்ட நடைமுறை கூட்டுறவு அரசியலின் தலைமை, வழக்கு மன்றத் தலைவர் கையிலும் கூட்டுறவு வழக்கு மன்றம், துணைமன்றங்கள் ஆகியவற்றினிடமும் இருந்தது. இம் மூன்று கூறுகளும் அவற்றின் தலைவர்களும் மற்றக் கூறுகளுக்கோ தலைவர்களுக்கோ கட்டுப்பட்டவையாயிராமல் தற்சார்பும் தன்னாண்மையும் உடையவையாகவே யிருந்தன. எனவே, ஆங்கில நாட்டைப் போல நாட்டுத் தலைவராகிய முதல் அமைச்சரோ அமைச்சர் குழுவோ அமெரிக்காவில் அரசியல் மன்றுக்குக் கட்டுப்பட்டு அதனிடம் பொறுப்பு வகிக்கவில்லை. ஒழுங்கு முறைப்படி கூட்டுறவுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குரிய கால எல்லைவரை அவர் ஆட்சி செய்வதை யாரும் தடுக்க முடியாது. அக் காலஎல்லை கழிந்த பிறகோ, அவர் உலகு நீத்த பொழுதோதான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப் படலாகும்.
கூட்டு அரசியலிலுள்ள இதே நிலைதான் தனி அரசியலிலும் ஏற்பட்டது. நாட்டுத் தலைவர் நிலையில் இருந்தவர் தனி