100
அப்பாத்துரையம் - 10
மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் உடைய குடியரசு நிறுவப் பெற்றது. ஆனால், இதனை நடத்தத் தக்க ஆற்றல் வாய்ந்த தலைவனில்லா நிலையில் நெப்போலியன் குடியில் வந்த லூயி நெப்போலியன் கை ஆட்சியைக் கொண்டு இரண்டாம் பேரரசை நிறுவினான் இது 1852முதல் 1870 வரை நீடித்தது. இக் காலத்தில் அரசியல் வளர்ச்சி ஏற்படாத போதிலும் அமைதி நிலவிற்று.நாட்டின் செல்வமும் செல்வாக்கும் வளர்ச்சியுற்றன. இதன் பிற்பகுதியில் பல போர்கள் நடைபெற்றன. இவற்றால் ஆட்சி சிறிது நலிவுற்றது. இறுதியில் பிரஷ்யாவுடன் (அதாவது செர்மனியுடன்) நடைபெற்ற போரில் பிரான்சு தோற்று அல்ஸாஸ்,லொரெயின் முதலிய கைத்தொழில் மாகாணங்களை இழக்க நேர்ந்தது. இதனுடன் இரண்டாம் பேரரசு வீழ்ச்சி யடைந்தது.
இதன்பின் மூன்றாவது தடவையும் ஒரு குடியரசு ஏற்பட்டது. முடியாட்சிக் கட்சியினருக்கும் வெறித்த குடியரசுக் கட்சியினரான பொது உடைமைக் கட்சியினருக்கும் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இக்குழப்ப நிலையில் கட்சிகளைப் பகைக்காது இணைத்துக் குடியாட்சிக் கட்சியினரான டியர்ஸும் மக்மோகனும் 1875-இல் தற்காலிமாக ஓர் அரசியலை நிறுவினர். இது உண்மையில் மூன்று வேறு வேறு மனிதர் ஏற்படுத்திய அரசியல் சட்டங்களின் கூட்டவியலே யாகும். ஆயினும் மேற்குறிப்பிட்டபடி எந்த உயர் அரசியலும் நிலைபெறாத அளவு அது அதன் நெகிழ்ச்சியின் பயனாக நிலைபெற்றது.
தொண்ணூறாண்டுகளாகப் பல அரசியல் அமைப்பு களையும் கையாண்டு கையாண்டு பார்த்த பிரஞ்சு மக்கள் இறுதியில்,வெற்றி அரசியல் அமைப்பின் நிறைவினாலன்று, அது வளர்ச்சிக்கு இடம் தரும் முறையில் அமைவதனாலேயே என்று கண்டு கொண்டனர்.
பிரஞ்சு அரசியலமைப்பு ஒரு வகையில் பிரிட்டிஷ் முறைக்கு மாறாய் அமெரிக்க முறையை ஒத்தது. அது நாளடைவில் வளர்ச்சியடைந்த உருவாயிராமல் ஒரே ஆண்டில் ஒரே மனிதனால் ஏற்பட்ட அடிப்படை மீது எழுந்தது ஆகும். ஆயினும் அது அமெரிக்காவைப் போலவும் முற்றிலும் இல்லை. அமெரிக்காவில் அரசியலமைப்பு ஒரு சட்டத்தை அடிப்படை