குடியாட்சி
101
யாகக் கொண்டது. பிரான்சில் அது 3 சட்டங்களை அடிப்படை யாகக் கொண்டது. அதனோடு அது அமெரிக்க அரசியலை விட மிகவும் நெகிழ்ச்சியு முடையது. அரசியலமைப்பில் மாற்றங் கொண்டு வருதல் இங்கே மிகவும் எளிது. இரண்டு அவைகளும் இணைந்த மன்றக் கூட்டத்தில் நிறைறேற்றப்பட்டால் அரசியல் அமைப்பில் எத்தகைய சீர்திருத்தமும் செய்யலாகும். ஆயினும் உண்மையில் 1875க்குப் பின் 3 தடவையே இச் சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளது. இது இவ் அரசியலமைப்பின் உறுதிக்கு ஒரு சான்று ஆகும்.
பிரான்சில் குடியரசுத் தலைவர் இடம் ஆங்கில மன்னர் இடத்தைப்போன்றே பெரிய மதிப்புக்குரியது. ஆனால் அதைப் போலவே நடைமுறையில் தனிப்பட்ட உரிமைகள் அற்றது. ரண்டு அவைகளும் கூடிய மன்றக் கூட்டத்தில் தனிப்பட்ட பெரும்பான்மை மொழிகள் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். பிரான்சில் இரண்டு அவைகளும் பெரும்பாலும் வேறுவேறு கட்டிடங்களிலேயே கூடுகின்றன. மேலவை(Senate) லக்ஸம்பர்க் அரண்மனையிலும்(Palais Luxemburg) ஆட்பெயரவை(Chamber of Deputees) பூர்பன் அரண்மனையிலும் (Palais Bourbon) கூடும். தேர்ந்தெடுக்கப்பட்டபின் தலைவர் ஆட்சி ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அதன் முடிவுக்கு ஒரு திங்களின் முன் தலைவர் இரண்டவைகளையும் கூட்ட வேண்டும். தலைவர் இடம் திடுமென நிரப்ப வேண்டிய விடத்தும் அது கூடும்.
தேர்தல்களில் நிற்கும் கட்சிகள் பலவாதலால் அவை ஒன்றிரண்டு கூட்டுக் கட்சிகளாகச் சேர்ந்து பொதுச் சார்பாக ஆட்களை நிறுத்தும். ஒவ்வோர் உறுப்பினரும் பல கட்சிகளுக்கு உகந்தவராயிருக்க வேண்டிய வராதலால் கூடிய மட்டும் எல்லாருக்கும் பொதுவான கொள்கைகளையே செயலாற்றுவர். எனவே அரசியலின் போக்கு வெறித்த முற்போக்குடையதா யிருக்கவோ அல்லது செயலார்வமிக்கதாயிருக்கவோ இடமில்லை.
இங்கிலாந்தைவிட அமெரிக்காவிலும் பிரான்சிலும் மேலவைக்கு ஆற்றல் மிகுதி. பிரஞ்சு மேலவையில் 300 உறுப்பினர் உண்டு. இவர்கள் 9 ஆண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தலும் ஆட் பெயரவைச் சார்பில்