104 ||-
இதற்கிடையில்
அப்பாத்துரையம் - 10
நாட்டுமக்கள்
பிரஷ்யாவிலேயே
பொறுப்பாட்சி கோரினர்.1848-இல் அவர்கள் பிராங்க் போர்ட்- ஆ-திமெயின் என்ற விடத்தில் தற்காலிக நாட்டுமன்றம்(Congress of Convention of Frankfort-on-the-Maine) கூடிப்பொறுப்புவாய்ந்த ஒற்றுமைப்பட்ட பேரரசு ஒன்று நிறுவ முயன்றனர். ஆயின் அதில் கலந்த அரசியல் புலவர்கள் காலம் நீட்டித்ததால் பிரஷ்ய அரசர் அவர்களைப் புறக்கணித்து அவர்கள் பரந்த மனப்பான்மைக்குச் சற்று விட்டுக்கொடுத்துத் தன் ஆட்சியையும் வலுப்படுத்தி1850- இல் ஓர் அரசியலை அமைத்தார். இவ்வரசியல் அமைப்பு நலிவுற்று நிலமாற்றங்களுடன் 1918 வரை நீடித்திருந்தது.
செர்மன் அரசியலறிஞருள் சிறந்தவரான பிஸ்மார்க் செர்மனியை ஒரே இனம் மொழி ஆகியவற்றால் இணைக்கப் பட்ட ஒரே கூட்டுறவு அரசியலாக்க விரும்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா செர்மன் இனமும் மொழியுமே கொண்டதாயினும் பிற இனங்களையும் உட்கொண்டிருந்ததால் போரிட்டாயினும் அதனை விலக்க உறுதி கொண்டார். அதே சமயம் அத்தகைய உறுதியான செர்மன் கூட்டுறவு பிரான்சுக்கு இடையூறு ஆகும் எனக் கருதி மூன்றாம் நெப்போலியன் அதை எதிர்த்தான். சூழ்ச்சித் திறத்தில் மிக்க பிஸ்மார்க் செர்மனியை வட செர்மனி தென் செர்மனி என இரண்டு கூட்டுறவுகளாக்குவதாகக் கூறிக்கொண்டு முதலில் ஆஸ்ட்ரியாவை முறியடித்து விலக்கி விட்டுப் பின் பிரான்சையும் முறியடித்து 1878-இல் செர்மன் கூட்டுறவுப் பேரரசை நிறுவினார்.
1878 முதல் 1918 வரை 40 ஆண்டுகளாகச் செர்மன் அரசியல் உலகிலேயே மிக உறுதி மிக்க அரசியலாகக் கருதப்பட்டு வந்தது. அதற்கேற்ப அதன் ஆட்சிக் காலத்தில் செர்மனி ஆற்றலிலும் செல்வத்திலும் நாகரிகத்திலும் உலகில் முதலிடம் பெறும் நிலைக்கு ஓங்கி வளர்ந்தது. ஆயினும் அதில் உண்மையான பொறுப்பாட்சி மிகக் குறைவு. உருவில் அமெரிக்க அரசியல் போன்றதாயிருப்பினும் அது முற்றிலும் பேரரசர் கைக் கருவியாகவே இருந்தது. 1914-இல் தொடங்கிய முதல் உலகப் போர்க் காலத்தில் பேரரசர் பிடி தளர்ச்சியடைத் தளர்ச்சியடைய அதன் வலுவும் குறைந்து 1918-இல் அது வீழ்ச்சியடைந்தது. அதன் பெரும் சிறப்புக்களுள் ஒன்று, அது ஒரு