குடியாட்சி
105
நாட்டு மக்கள் அல்லது ஓர் அறிஞர் குழுவின் முயற்சியால் எழுந்ததன்று. ஒரு தனிமனிதன் அதாவது பிஸ்மார்க்கின் அறிவுத் திறத்தால் எழுந்து உலகை இரண்டு தலைமுறையளவும் ஆட்டி வைத்ததே அதன் பெருமையாகும். ஆட்சி முறையிலும் அதனைப் பிற பேரரசுகளுடன் நன்கு ஒப்பிடலாம்.
அமெரிக்க அரசியலைப் போலவும் இந்தியாவில் 1918-இல் ஏற்பட்ட அரசியலைப் போலவும் செர்மன் அரசியலும் இரட்டையாட்சித் துறைப்பட்டதாகும். அரசியல் காரியங்கள் கூட்டுறவுத் துறைகள் எனவும் தனி அரசியல் துறைகள் எனவும் வகுக்கப்பட்டிருந்தன. வெளிநாட்,வெளிநாட்டு வாணிகம், நிலப்படை, கடற்படை, வரிப்பிரிவு, நாட்டுக்கடன், பொருள் நிலையங்கள், தொழிலமைப்பு, ஆராய்ச்சித் துறைகள், பத்திரிகைக் கட்டுப்பாடு ஆகியவை கூட்டுறவுத் துறைகள். சட்டமமைத்தல், வழக்குகள் ஆகியவையும் பெரும்பாலும் கூட்டுறவுத் துறைகளே.
முதலில் இக்கூட்டுறவின் தலைவராயிருந்து பின் பேரரசரான பிரஷ்யா அரசரின் கால்வழியில் வந்தவர்கள் கெய்ஸர் (பேரரசர்) என்ற பட்டம் பெற்றனர். பிரிட்டிஷ் பேரரசர் பிரிட்டனின் அரசராகவும் பிரிட்டிஷ் பேரரசின் பேரரசராகவும் விளங்குவதுபோல் அவர் பிரஷ்யாவின் அரசராகவும் செர்மனியின் பேரரசராகவும் விளங்கினார்.
முதலுலகப் போருக்கு முன்பே சீர்திருத்தப் பொதுக் குடியாட்சிக் கட்சியினர்(Social Democrats) பேரரசினை எதிர்த்து வந்தனர். 1917-இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் 1918-இல் நிகழ்ந்த செர்மன் பேரரசின் படுதோல்வியும் அவர்களை வலுப்படுத்தின. பேரரசர் பொதுத் தேர்தலுரிமை முதலிய பலவற்றையும் இறுதி நேரத்தில் விட்டுக்கொடுத்தும் பயனின்றிப் பேரரசு கவிழ்ந்தது. அதன்பின் சில காலம் வெய்மார் அரசியல் ஆங்கில அரசியல் முறையைப் பின்பற்ற முயன்றது. ஆனால் உலகப் போரால் ஏற்பட்ட நெருக்கடியை அது சமாளிக்க முடியாமல் போகவே படிப்படியாக நாசியர் ஆட்சிமுறை ஏற்பட்டது. இது பெயரளவில் குடியரசாயினும் உண்மையில் பழைய பேரரசின் புது உருவேயாகும். கெய்ஸரிடத்தில் இப்போது பொருள் காப்பாளராய் அமைந்த ஹிட்லர் நின்றார்.