பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(106

அப்பாத்துரையம் – 10

இவ்விடம் பிஸ்மார்க்கால் தனக்கென ஏற்படுத்தப்பட்டது. அது கெய்ஸர் கையாளின் கையிலிருந்தவரை அவரே வல்லாளராய் ஆட்சி செலுத்தினார். கெய்ஸரில்லாதபோது பொருள் காப்பாளரே அவ்விருதிறத்து உரிமைகளையும் பெற்றுப் புதிய வல்லாள கண்டராயினர்.

1945-இல் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்ச்சி யடைந்த பின் செர்மனி நேச நாடுகளிடையே பிரிக்கப்பட்டு ஒரு பகுதி ரஷ்யச் சார்பில் பொது உடைமை முறை ஆட்சிக்கும் மற்றப் பகுதிகள் பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஆகியவற்றின் தலைமையில் குடியாட்சி முறைக்கும் உட்பட்டிருக்கிறது.

இங்ஙனமாக ஒரு வகையில் இங்கிலாந்து மக்களின் பழம் பெருந் தாயகமான செர்மனி ஐரோப்பாவில் வணங்காமுடி பெற்றுப் பெரும் படையுடன் பேரரசாட்சி நிறுவ இரண்டாயிரம் ஆண்டு முயன்றும் இன்றும் உருவான அரசியல் அமைக்க முடியாமல் திணறும் நிலையிலேயேயுளது.

இன்னும் ஒரு புறம் ஐரோப்பா முழுமைக்குமே நாகரிகமாகிய பாலூட்டிய தாயகம் இத்தாலி 5 ஆம் நூற்றாண்டில் ரோமர் பேரரசாட்சி சீர்குலைந்தபின் அரசியல் குழப்பத்துட்பட்டுப் பல தடவை பிறநாடுகளின் அரசியலடிமையாய் வாழ்ந்து இறுதியில் நெப்போலியனால் வெல்லப்பட்டு அவன்கீழ் ஒரே நாடாக மீட்டும் ஒற்றுமைப் படுத்தப்பட்டது.நெப்போலியன் ஆட்சியில் அவர் சட்டம் ஒழுங்கு முதலிய யாவும் இத்தாலி வாழ்வில் பொறிக்கப்பட்டன. அதன் பயனாக இன்றளவும் அது பிரான்சுடன் பல ஒற்றுமைகள் உடையதாய் விளங்குகிறது.

நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின் நடைபெற்ற வியன்னாக் காங்கிரஸில் பிஸ்மார்க் இத்தாலியை மீட்டும் துண்டுபடுத்திப் பெரும் பகுதியை ஆஸ்ட்ரியாவுக்கும் மற்றப் பேரரசுகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். ரோம் கத்தோலிக்க சமயத்தின் உலகத் தலைவரான திருப் பெருந்தந்தையிடம்(Pope) தரப்பட்டது. இத்தாலி மக்கள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிளர்ந்தெழுந்தும் சிற்றரசுகளுள் ஒன்றிலேனும் பொறுப்பாட்சி ல்லாத நிலையில் ஒற்றுமை ஏற்பட வழியில்லாதிருந்தது.1848- இல் இத்தாலியில் ஒரு பகுதியில் தற்சார்புடைய மன்னராயிருந்த