குடியாட்சி
115
சட்டங்களைவிட இக் குடியேற்ற நாட்டுச் சட்டங்களே நாட்டுத் தொழிலாளர் நலங்களைப் பெரிதும் சார்ந்தவையா யிருக்கின்றன.
மேற்கூறிய செய்திகளால் பிரிட்டனின் முன்மாதிரியைப் பின்பற்றிய ஐரோப்பிய நாடுகள் தமக்கும் தம் மரபுக்கும் வளர்ச்சி முறைமைக்கும் புறம்பான அரசியலைப் பின்பற்றியதினால் இடர்ப்பட்டு இன்னும் பிரிட்டனை விடப் பிற்பட்டே யிருந்துவருகின்றன. அமெரிக்கா சிலவகைகளில் முற்பட்டும், குடியேற்ற நாடுகள் இன்னும் மிகுதியாக அவ் வளர்ச்சியுடன் ஒன்றுபட்டு மிருப்பதனால் தாய் நாட்டினும் மிகுதியாகக் கூடச் சில வகைகளில் அவை முற்பட்டும் இருக்கின்றன என்று கூறலாம்.
இனி இக் குடியேற்ற நாடுகளைப் போலவோ, அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை ஒத்தோ பிரிட்டனின் நாகரிகம், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை யாயிராத இந்தியா முதலிய சார்பு நாடுகளையும் பிற நாடுகளையும் ஆராய்வோம்.