பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. தற்கால இந்திய அரசியல் முறையும் - அரசியல் இயக்கங்களும்

இந்தியப் பெருநிலப்பரப்பை ஒரு நாடு என்றும் ஒரு கண்டம் என்றும் கூறுபவர் உண்டு. உலகில் 8-இல் ஒரு பங்காக இருக்கும் அதன் பரப்பும் 5-இல் ஒரு பங்காக அமைந்த மக்கள் தொகையும் பல இன, மொழி, சமய நாகரிகப்படிகள் அடங்கிய இதன் பலவகைப் பெருக்கமும் பிறவும் இதனை ஒரு நாட்டைவிட எவ்வளவோ பெரிதாக்குகின்றன. அளவு மக்கள் தொகை ஆகிய இரண்டாலும் அது ஒரு சிறு கண்டம் அல்லது துணைக் கண்டம் என்னலாம். பலவகைப் பெருக்கத்தைப் பார்த்தாலோ கண்டங்கள் எதுவுங்கூட இதற்கு ஈடில்லை. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட ஒரு சமயமே நிலவுகிறது. ஆசியாவில் இந்தியா நீங்கலாக மூன்று நான்கு சமயங்களே நிலவுகின்றன. நாடு என்று சிலர் கொள்ளும் இந்தியப் பெருநிலப் பரப்புக்குள்ளோ ஒன்றிரண்டு நீங்கலாக எல்லா உலகச் சமயங்களும் இடம் பெற்றுள்ளன. ளன. போகநாடு என்று கூறப்படும் இந்தியாவிலேயே ஒரு சமயம் என்று அழைக்கப்பட்ட, ஆனால் உண்மையில் பல சமயங்களின் கூட்டுறவாகிய இந்து சமயமும் உள்ளது. உலகில் தோன்றிய சமயங்களில் ஒரு சில நீங்கலாக அனைத்தும் இங்கே தோன்றியவையே. மொழிகளில் உலக மொழிகள் ஏழுநூற்றுச் சில்லறை. இந்தியாவினுள் அவற்றில் நானூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. மக்கள் இனங்களை நோக்க, உலகின் பிற பகுதிகளிலுள்ள எல்லா இனங்களும் வேறெங்குமில்லாத தனியினமும் இந்தியாவில் உண்டு.நாகரிகப்படிகளை நோக்க, உலக நாகரிகத்தின் உச்சிநிலை முதல் நாகரிகத்தில் கடைப்பட்ட மக்கள்வரை, முதல்தரச் செல்வர் முதல் கடைப்பட்ட பஞ்சைகள் வரை இப்பரப்பில்