பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(118

அப்பாத்துரையம் – 10

பயனாகவே ஆரியர் எளிதில் இப் பரப்பில் முன்னேறினர் என்றும் முன்பிரிவுகளில் கூறினோம். ஒற்றுமையும் இன உணர்வும் அற்ற இப் பெருங்குடிமக்களிடையே வந்து கலந்த ஆரியர் இவ்வேறுபாடுகளைப் பயன்படுத்தியும் பெருக்கியும் நிலவரமாக்கியும் ஒரு நாடாயில்லாது ஒரு தனி உலகமாய் இருந்த இதனை உண்மையிலேயே பல நாடுகளாகவும் பல கண்டங்களாகவும் ஆக்கினர். திராவிடர்களிடையே நிலவிய தொழில் பாகுபாடும் நாகரிக உயர்வு தாழ்வுகளும், பிறப்பு வேற்றுமை, இன வேற்றுமை, சமய வேற்றுமைகளாக மாற்றப்பட்டன. ஒரே இனத்துட்பட்ட பல்வேறு அரசர் குலங்கள் ஞாயிற்றுவழி என்றும் திங்கள் வழி என்றும் அழற் கடவுள்வழி என்றும் பகுக்கப்பட்டன. மேலும் ஆரியச் சார்பென்றும் ஆரியர் காலமென்றும் திராவிடர் (சூத்திரர்) என்றும் ஆரியர் நலங்களுக் கேற்றபடி பகுக்கப்பட்டன. வேறுபட்டுப் பூசலிட்ட அவர்கள் பூசலிடையே ஆரியரும் அவரைச் சார்ந்தவரும் ஓரினமென ஒற்றுமையுற்று அவர்கள் ஆக்கத்தைச் சுரண்டித் தம் ஆக்கத்தை மேம்படுத்தினர்.

ஒரு

இதன் பயனாக வரலாற்றுக்கால இந்தியா பைத்தியக்காரர் விடுதிபோலியங்கலாயிற்று. இருக்குவேத காலங்களில் தூய ஆரியர் உறைவிடமாகக் கெள்ளப்பட்ட ஏழு ஆற்றுநிலம் (சப்த சிந்து நாடு அதாவது பஞ்சாப் முதலிய வடமேற்குப் பகுதிகள்) இன்று முகமதிய சமயமும், பாரசீகச் சார்பு மொழிகளும் பயிலும் வேற்று நிலமாயிருக்கின்றன. இதிகாச காலத்தில் ஆரியரகம் என்று கூறப்பட்ட கங்கைநாடு (ஐக்கிய மாகாணங்கள்) ஆரிய, பாரசீக, அராபிக் கலவைச் சொற்களாலான இந்தி மொழிக்கு நிலைக்களமாயிற்று. பெரும்பான்மைத் திராவிடர் கலப்புப்பெற்ற வங்கம், கூர்ச்சரம், மராடம் முதலிய பகுதியிலுள்ள மக்கள் தம்மை ஆரியரெனக் கொண்டு பிற திராவிட மக்களை விலக்கி வாழ்ந்தனர். இதன் பயனாக வங்கம், பீகார், அஸாம் முதலிய இடங்கள் புத்த சமண இஸ்லாமிய சமயங்களின் நிலைக்களங்களாயின.

முழுக்க முழுக்கத் திராவிடரே வாழும் மலையாளம், தெலுங்கம், கன்னடம், துளுவம் ஆகிய பகுதி மக்கள் ஆரியப் பூச்சுப்பூசி எப்படியாவது ஆரியராக இடம்பெற்று விடவேண்டும்