பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(120)

அப்பாத்துரையம் – 10

இவற்றைச்

நந்தரும் மோரியரும் பேரரசு ஏற்படுத்தி செயற்படுத்தினர். குப்தர் காலத்தில் அரசியல் தழைத்தோங்கிய தனால் அக் காலமே ஆரியர் பொன்னாட்சிக் காலம் என நிலவிற்று. தென் இந்தியாவிலும் தக்காணத்திலும் சளுக்கர் இரட்டர் (ராஷ்டிரகூடர்) ஆந்திரர், பல்லவர் முதலிய பலகால் வழிகளில் பேரரசர் ஏற்பட்டு இவற்றைப் பயன்படுத்தினர். கி.பி. ஆயிரத்தை ஒட்டிச் சோழரும் அவரைப் பின்பற்றி விசயநகர மன்னரும் மராட்டரும் தெற்கில் அரசு வகுத்தனர். வடக்கில் ஆப்கானியக் கால்வழியினனாகிய சேர்சாவும்(ஞாநச ஞாயா) முகலாயப் பேரரசர் அக்பரும் அரசியல் பொருளியல் வல்லுநராகிய அபுல்பாசல், தொடர்மால் ஆகியவர்கள் உதவியுடன் அதனை விரிவுபடுத்தினர். 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரிட்டிஷ் வாணிகக் குழுவினர் ஆட்சி வகுத்தபோது பண்டை மரபுடன் வளர்ச்சி யடைந்த இம் முறையே சிற்சில மாறுதல்களுடன் பிரிட்டிஷ் ஆட்சி முறையாக மாறிற்று.

இந்தியாவில் ஏற்பட்ட பல அரசியல் கொந்தளிப்பு களிடையேயும் அரசியல், சமய, வாழ்வியல் பண்புகள் உண்மையில் கெடாமல் நன்கு பேணப்பட்டு வளர்ந்தன என்பதை வரலாறு தெளிவுபடக் காட்டுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, பண்டை ய இந்திய அரசியலின் நகராண்மையும் ஊராண்மையும் நகர்களில் சீர் குலைந்தாலும் சிற்றூர்களில் பேணப்பட்டு வந்தன. போர்களாலும் வெளிநாட்டார் போட்டியாலும் நகர்களின் கைத்தொழிலும் வாணிகமும் அழிந்தன. ஆனால் ஊர்களின் சிறு தொழிலும் உழவும் யார் கொள்ளையாலும் கெடாமல் நலிந்தேனும் வாழ இடமிருந்தது.அவற்றின் மூலம் அரசர் கால்வழிகள் மாறுபட்ட காலங்களிலும் ஆட்சி முறை கெடாத நிலைமைக்குத் தக்கபடி அலைகள் போல விழுந்தெழுந்து அமைந்தன.

பிரிட்டிஷ் வாணிகக் குழு இந்தியாவை நாடி வந்தகாலம் பிரிட்டிஷ் இளைஞர் அமெரிக்காவில் குடியேறத் தொடங்கிய காலமாகிய 17-ஆம் நூற்றாண்டே. அந் நூற்றாண்டுக்குள் அமெரிக்கா பிரிட்டிஷார் கைவசமாயிற்று. இந்தியாவிலோ அவர்கள் வாணிகம் மட்டும் பரந்தது. 18-ஆம் நூற்றாண்டில்