126) ||-
அப்பாத்துரையம் - 10
1880 முதல் 1884 வரை மன்னர் ஆட்பெயராயிருந்த ரிப்பன் பெருமகனார் ஆங்கில உயர்நிலைக் கல்விக்கான பல்கலைக் கழகங்கள்,நாட்டாண்மை அரசியல் நிலையங்கள்(Local Self Gov- ernment) ஆகியவைகளை ஏற்படுத்தினார். அத்துடன் தாய்மொழிச் செய்தித்தாள்களுக்கிருந்த கட்டுப்பாட்டை அவர் அகற்றினார். தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சில சீர்திருத்தங்களைத் தொடங்கினார். இந்தியப் பெருநிலப் பரப்பின் உயர்நிலை வகுப்பார் இச்சீர்திருத்தங்களால் மிகவும் நன்மையடைந்தனர். ரிப்பனை அடுத்து முதல் தலைவரான டப்பரின் பெருமகனார் (1884-1888) காலத்தில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படும் வரையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் நோக்கத்துடன் செல்வரும் படித்த வகுப்பினரும் இந்திய நாட்டுரிமைக் கழகம்(ஐனேயை ேசூய்வடையேட ஊடிபேசநள்ள) ஒன்று ஏற்படுத்தினர். இவ்வாண்டு முதல் பெரும்பாலும் ஆண்டுதோறும் அது கூடி மக்கள் நிலைகளைப்பற்றி ஆராய்ந்து தீர்மானங்கள் நிறைவேறிற்று.
1892-இல் எல்சின் பெருமகனார் முதல்தலைவரா யிருக்கையில் இந்திய சட்டமன்றத்தில் பணியாளரல்லாத உறுப்பினர் தொகை கூடுதலாக்கப்பட்டதுடன் வரவு செலவுத் திட்டம் பற்றி ஆராயவும் இடைக்கேள்விகள் கேட்கவும் உரிமைகள் தரப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியிலமைந்த மன்னர் ஆட்பேர்களுள் திறமை காரணமாகப் பிரிட்டிஷார் போற்றுதலையும் வெறித்த வல்லாட்சி காரணமாக இந்திய மக்கள் வெறுப்பையும் ஒருங்கே அடைந்தவர் கர்சன் பெருமகனார். இவர் செய்த சீர்திருத்தங் களுள் ஒன்று 1905-ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்காளப் பிரிவினை. வங்காளம் ஒரே மாகாணமாக ஆட்சி செய்யப்பட முடியாதபடி அவ்வளவு பெரிதானதால் இப்பிரிவினை வேண்டப்பட்டது என அவர் கூறினார். ஆனால், மொழி, பழக்கவழக்கங்கள், நாட்டுப்பற்று ஆகியவற்றால் கிட்டத்தட்ட ஒரு நாடாய் இணைந்து நின்ற வங்கத்தின் மக்கள் இதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். 1911-இல் இது போன்ற இன்னொரு மாறுதல் ஏற்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது முதல் கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாயிருந்தது.