130
|– –
அப்பாத்துரையம் – 10
1935-இல் குடியாட்சியின் தன்மையும் பொறுப்பாட்சியின் தன்மையும் மாகாண அரசியலிலேனும் இடம்பெறும் முறையில் அடுத்த பெரும்படியான முன்னேற்றம் தரப்பட்டது. இது அவ்வாண்டு ஆகஸ்டு 8இல் பிரிட்டிஷ் அரசியல் மன்றில் நிறைவேறி மன்னர்பிரான் இணக்கம் பெற்றது. இது மாகாணங்களில் மட்டுமே பொறுப்பாட்சியைப் பேரளவில் தந்ததோடு மேலரசியலையும் சீர்திருத்துவதற்கான முதற் படிகளை உட்கொண்டதா யிருந்தது. இந்தியப் பெருநிலப் பரப்பின் விரிவுக்கும் பல்வகைப் பெருக்கத்திற்கும் அரசியல் முறையில் ஏற்பட்ட செயற்கைப் பிரிவுகட்கும் ஏற்றவகையில் இந்திய அரசியலை அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளின் அரசியலைப் போலவே கூட்டுறவு அரசியலாகக் கொள்வதென இச்சட்டம் ஒத்துக்கொண்டது. இக்கூட்டுறவில் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் உடனடியாகச் சேர்வதென்றும் துணைமன்னர் நாடுகள் தம் விருப்பப்படி அவ்வப்போது சேர்வதென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.
க்கூறு
சட்டத்தின் கருத்து முற்றிலும் நிறைவேற்றப் பட்டால் பழைய நடைமுறைக் குழுவிற்கு மாறாக இச்சட்டத்தின்படி10க்கு மேற்படாத அமைச்சர்கள் முதல்தலைவரால் அமர்த்தப்படுவர். கட்சிகள் பலவற்றின் கட்சிப் பிணக்குகளிடையே முற்றிலும் நிறைவேறவில்லை. பழைய நடைமுறைக் குழுவே தொடர்ந்து நின்று தொகையில் விரிவுபெற்று வந்திருக்கிறது. சட்டத்தின்படி அரசியல் மேலவையில்(Council of State) பிரிட்டிஷ்
இந்தியாவில் குறுகலான ஒரு தேர்தல் தொகுதியில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 156 உறுப்பினர்களும் துணைமன்னர் நாடுகளிலிருந்து அமர்வுபெற்ற 104 உறுப்பினரும் இருப்பர். மூன்றாண்டுக்கு ஒருமுறை பிரஞ்சு மேலவையைப் போல் இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருள் மூன்றில் ஒரு பகுதியினர் விலக, புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலவையின் தேர்தல் தொகுதியில் நூறாயிரம்பேர் வரைமொழி உரிமை உடையவர்கள். கீழவையில் மொத்தம் உறுப்பினர் 375 பேர். இவர்களில் 250 பேர் பிரிட்டிஷ் இந்திய மாகாண அவைகளால் தேர்ந்தெடுக்கப்படுவர். கீழவையின் தேர்தல் மறைமுகத் தேர்தலாகும்.
ங்ஙனமாக