140
||– –
அப்பாத்துரையம் - 10
ஐரோப்பியப் புரட்சிகளைப் போல் வெறும் அரசியல் புரட்சியாயிராமல் வாழ்வியலையும் பொருளியலையும் முற்றிலும் மாற்றி மக்கள் வாழ்க்கையில் புரட்சியமைத்து அதன் மீதே அரசியல் புரட்சி வகுத்தது ஆகும். ஐரோப்பிய முதலாளித்துவ வாழ்வியலில் ஊறிய ஐரோப்பிய அரசியலறிஞர் இதனைக் குடியாட்சிக்கு மாறுபாடான தெனவும் மனித உரிமைகளை மறுப்பதெனவும் கொடுமையும் குருதியும் சிந்தலும் மிகுந்தவை எனவும் பலவாறாகக் கண்டித்துள்ளனர். ஆனால், இவ்வறிஞர் மனத்திரையில் உலகில் 100க்கு 97 பேர் ஆன சுரண்டப்படும், அறியாமையில் மூழ்கிய ஏழை மக்களைவிட, சுரண்டுபவரும் தன்னல மிதுவெனத் தெளிவு பட அறிந்தவரும் வு
ன 100க்கு 3 செல்வர்களே மனித உருவில் முனைந்து நிற்கின்றனர் என்று கூறுவது மிகையன்று. உலக மக்கள் 200 கோடிப் பேரில் 6 கோடியளவாக இச் செல்வர் இருப்பதாக வைத்துக்கொண்டால் கூட அவர்கள் குருதி சிந்துவதால் படிப்படியாகக் குற்றுயிருடன் வதைப்படும் 194 கோடிப்பேர் நல்வாழ்வு பெறுவதானால், அக் குருதி ஒரு பொருட்டு அன்று என்பதை அவர்கள் உணர்கிறார்களில்லை. முதலாளி அரசியல்களின் போரில் ஏழைமக்கள் இதனினும் இறந்துபட அவர்கள் குடிகள்வாழவும் வகையற்றுப் போகின்றன என்பதை மறுப்பது இவ் வறிஞர்களுக்கு எளிதான செய்தியாய் விடுகின்றது.
உலகின் அரசியல்களுள் முன் மாதிரி எதுவுமின்றிப் புதுமுறை வகுத்த உருசிய அரசியலமைப்பில் குறை காண்பது எளிது. ஆனால் அது ஒரு தேர்வுக்காலமுறை என்பதை மறக்கக் கூடாது. அது உலகிற்கு ஒரு படிப்பினை என்பதையும், குருதி சிந்தி உருசியர் காட்டிய இப்படிப்பினையைக் குருதி சிந்தாமலே மற்ற நாடுகள் பின்பற்றக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. உலகெங்கும் வளர்ச்சியடைந்து வரும் பொதுமக்கள் விழிப்பினிடையே முதலாளித்துவ அறிஞர் புகழும் குடியாட்சி அரசாங்கங்கள் கூட உருசிய அரசியலைப் பின்பற்றி வருவது கண்கூடு. உருசியரின் ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டங்களையும் கோடிக்கணக்கில் பொருள்குவிக்கும் திட்டங்களையும் ஏளனச் சிரிப்புடன் கேலி செய்த அறிஞர்கள் இப்போது ஆயிரக்கோடிக் கணக்கில் நாலாண்டுத் திட்டமும் இருபதாண்டுத் திட்டமும் வகுத்து ஒருவருக்கொருவர் போட்டியிடத் தொடங்கியிருக்