குடியாட்சி
149
முறையையும் விடுதலையையும் வேண்டிநின்றது. விடுதலை இயக்கம் வளருந்தோறும் பிரிட்டனின் முன்மாதிரி இந்தியாவுக்குப் பொருத்தமானதன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. விடுதலை
யக்கத்தை ஏளனம் செய்துவந்த பிரிட்டிஷ் அரசியலறிஞர் இந்தியா ஒரு நாடன்று; நாடுகள் பல கொண்ட ஒரு கண்டமே எனக்கூறி நையாண்டி செய்ததுண்டு. அந் நாளில் நாட்டுரிமைக் கட்சித் தலைவராய் விளங்கிய அயர்லாந்துப் பெருமாட்டி, திருவாட்டி, அன்னிபெசன்ட் அம்மையார் 'இந்தியா ஒரு நாடே' என்று ஒரு நூலெழுதி விடையிறுத்தனர்.
ஆயினும் உள்ளுற இந்தியாவின் பல்வகைப் பெருக்கம் பலரை உறுத்திற்று. ஆகவே, பிரிட்டனின் தனியாட்சி முறை நல்ல முன்மாதிரி அன்றெனினும், அமெரிக்காவின் கூட்டுறவு ஆட்சி போதிய அளவு முன்மாதிரியாகும் என்ற கருத்து எழுந்தது. இனம், சமயம் முதலியவற்றினும் மொழியே தலைமையான வேறுபாட்டு அறிகுறியாதலால் மொழிவாரியாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவாட்சி ஏற்படவேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இங்கும் ஒரு சிக்கல் எழுந்தது. அமெரிக்கா இனம் பண்பியல், சமயப்பிரிவு ஆகிய வகைகளில் மாறுபாடுகள் உடையதாயினும் சமய ஒற்றுமையும் அதனினும் சிறப்பாக மொழி ஒற்றுமையும் உடையது என்பது எடுத்துக் காட்டப் பட்டது. இவ்வேறுபாட்டை அகற்றும் முயற்சியாகவே பொதுமொழி வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.வடநாட்டில் இயற்கையாகவே முகலாயர் ஆட்சியில் உருதுமொழி வடநாட்டிலேனும் பொது மொழியாய் ஏற்கத் தடை யெதுவுமில்லை. ஆனால், பெரும்பான்மை ஆரிய இந்து ஆதரவு பெற்ற நாட்டுரிமைக் கட்சியினர் உருதுவிலும் இந்து மக்க டையே பரந்துவிரிவுற்ற இந்த மொழியைப் பொ
மொழி யாக்க முன்வந்தனர். இதனால் வடவரிடையே இந்து முஸ்லிம் வேற்றுமை பிறந்தது.
இந்தியாவுக்குப் பொதுமொழி வகுக்கும் முயற்சியால் மொழியினும் இனம்வலிது என்ற உண்மை வெளிப்பட்டுப் பல மொழி பேசும் வடநாட்டு முஸ்லிம்கள் உருதுவையும் (உருது உட்படப்) பல மொழி பேசும் வடநாட்டு இந்துக்கள் இந்தியையும்