152) || — —
அப்பாத்துரையம் - 10
உருசியாவின் இனங்களிடையேயும் உள்ளார்ந்த ஒற்றுமையை விளைவிக்கும் முறை ஆகும். இனத்துக்குத் தனிப்பேராண்மை தந்தால் இனப்பிரிவு நிலைபெற்றுவிடும் என்று சிலரும், இனப் பேராண்மையால் சிறுபான்மை இனம் மிகுதிச் சலுகை பெற்றுப் பெரும் பான்மையினர் பேராண்மை அளவு குன்றும் என்றும் பலர் அஞ்சுகின்றனர். அமெரிக்க அரசியலில் மேலவையில் சிறு நாடும் பெரு நாடும் ஒரே அளவு பேராண்மை பெறுகின்றன. உருசியாவில் கூட்டுறவு அரசியல் மன்றில் கூட்டுறவு மன்றில் மக்கள் தொகையை ஒட்டிய சரிநிகர் பேராண்மை (கூட்டுத் தொகுதி முறையில்) அமைந்திருக்கிறது. ஆனால், இனங்களின் பாதுகாப்பை முன்னிட்டு இன மன்றத்தில் இனங்கள் ஒவ்வொன்றுக்கும் அவற்றின் பெருமை சிறுமைகளைப் பாராமல் சரிநிகர் நிலையான பேராண்மை தரப்பட்டிருக்கிறது. கிட்டத் தட்ட எட்டுக்கோடிப் பேரை உட்கொண்ட பேருருசியருக்கும் ஆயிரக்கணக்கிலுள்ள சின்னஞ்சிறு இனங்களுக்கும் ஒரே அளவு பேராட்கள் தான். இந்தியாவில் இதற்கு நேர்மாறாக இனப் பாதுகாப்புக்கு இனப் பேராண்மை (தனித் தொகுதி) தர இணங்காது நாட்டுரிமைக் கழகம் போராடுகிறது. ஓரினத்துக்குத் தந்து மற்ற இனங்களுக்கு மறுக்கிறது. பேரினத்துக்கும் சிற்றினத்துக்கும் ஒப்பான பேராண்மை உடைய மன்றம் ஒன்றும் தொகைவாரியான மன்றம் ஒன்றும் அமைவதே இச் சிக்கலைத் தீர்க்கும் வழியென உருசியா காட்டும்.
ன னாரு படிப்பினை பல
மேலும் இனவாரியாக நாடுகளைப் பிரிக்க உருசியா தயங்கவில்லை. எனவேதான் இனவாரி நாடுகளும் பிரிந்த பின்னும் அப் பேரரசியல் கூட்டுறவில் தம் விருப்பத்துடனேயே இணைகின்றன. இந்தியாவில் பிரியவேண்டும் என்ற இனத்தைப் பிரிப்பதால் அன்புப் பிணைப்பு ஏற்படும் உண்மையை அன்புமுறையும் அருள் முறையும் பேசும் காந்தியடிகள் போன்ற தலைவர்கள்கூடக் கவனிக்காதது வருந்தத்தக்கது. அன்மட்டு மன்று; சரிநிலைக் கொள்கையிலும் உருசியாவிலும் மிகுந்த அக்கறை செலுத்தும் சவகர்லால்நேரு போன்ற பேரறிஞர்கள் நாட்டுரிமைக் கழகத்தின் தலைவர்களா யமைந்த போதிலும் இவ் வகையில் மக்களுக்கு வழிகாட்டாதது வியப்புக் கிடமாகும்.