பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

163

நாடுகளின் அமைப்பு! அதன் ஒளியின் துளக்கத்தில் உலகமக்கள் நம்பிக்கை வளர்கின்றது. அதன் தளர்ச்சியில் அவர்கள் உள்ளக் கிளர்ச்சியும் தளர்ச்சியுறுகின்றது. அவர்களின் நம்பிக்கையைத் தளரவிடாமல், அந்நம்பிக்கை அடிப்படையாகவே உலக அமைதியையும், ஒற்றுமையையும், உலக மக்கள் நல்வாழ்வையும் கட்டமைத்து வளர்ப்பது உலகப்பற்றாளர், அறிஞர் ஆகியவர் கடமை ஆகும். வருங்கால உலகின் சிற்பிகளாகிய இளைஞரும், நங்கையரும், மாணவரும், மாணவியரும் இதில் கருத்துச் செலுத்த வேண்டுவது அவசியம்.

போர் என்னும் ஒன்று உலகில் என்றுமே ஏற்பட முடியாதபடி செய்யவேண்டும் என்று நெடுநாளாகவே உலகப்பற்றாளர் சிலர் கனவு கண்டு வந்ததுண்டு. ஆனால், போரை ஒழித்துவிடுவது எப்படி? என்பது பற்றி எல்லாரிடையேயும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. தவிர, 'போரை ஒழித்துவிடுவது என்பது முடியாத காரியம்,' என்று கூறுபவரும் உண்டு. மற்றும், 'போர் இயற்கையானது உண்டு.மற்றும், இயற்கையானது.போரினால் மக்களுக்கு வீரமும் உணர்ச்சியும் நாகரிக வளர்ச்சியும் ஏற்படுகின்றன,' என்று கருதுபவரும் இல்லாமலில்லை. ஆயினும், போரில் அவாவுடையவர் மட்டுமன்றிப் போரில் நம்பிக்கை யுடையவரும் அதனை வெறுக்காதவரும் வரவரக் குறைந்தே வருகின்றனர். ஏனென்றால், இக்காலப் போர்களின் அழிவு பழங்காலப்போர்களைப் போன்றதாயில்லை. போர்கள் ஒரு நாட்டை மட்டுமன்றி, எல்லா நாடுகளையும் பாதிக்கின்றன; போரில் ஈடுபட்ட நாடுகள் மட்டுமன்றி, ஈடுபடாத நாடுகளும் அவற்றின் அழி விளைவுகளுக்கு ஆளாகின்றன.

பழங்காலப் போர்களில் உலகின் ஏதோ ஒரு மூலையில் எவையோ இரண்டு நாடுகளின் பெயரால் யாரோ சிலர் சண்டை செய்தனர் என்ற நிலையே ஏற்பட்டிருந்தது. பொதுமக்கள் எப்பகுதியிலும் அவற்றில் மிகுதியாக ஈடுபடவோ, அவற்றில் அக்கறை கொள்ளவோ இல்லை. அவர்கள் போருடன் தொடர்பற்ற நிலையில் வழக்கம்போல வாழ்க்கை நடத்தியே வந்தார்கள்.போர் முடிந்த பின்னருங்கூட, 'யார் வெற்றி பெற்றார், யார் தோற்றார்?' என்ற பேச்சுடன் உலகம் கவலையற்றிருக்க முடிந்தது. ஆனால், இன்று இந்நிலை மாறிவிட்டது. போர்