ஐக்கிய நாடுகளின் அமைப்பு
167
முடியாது போகும்: அவை பிரிந்து நின்றால், எருதுகள் ஒவ்வொன்றாக எளிதில் கொல்லப்படும். ஒற்றுமையின் வலிமையைக் காட்டும் கதைகள் இவை. ஆனால், இவ் வொற்றுமைப்பண்பு, விடுதலை ஆர்வத்தின் மீதே அமைக்கப் பெற முடியும். விடுதலை ஆர்வத்துக்கு எதிராக வலிந்து கட்டப் படும் ஒற்றுமை ஒற்றுமையுமாகாது: கட்டுப்பாடும் ஆகாது. அஃது அடிமைத்தனமேயாகும். இத்தகைய ஒற்றுமை நீடித்துநில்லாது; வலிமையுடையதும் ஆகாது.
இயற்கையின் ஆராய்ச்சி, உலக நாகரிக வரலாறு,நாட்டு வரலாறு ஆகிய யாவும் இவ்வுண்மையை விளக்க வல்லன.
உயிரின வளர்ச்சியில் சிற்றுயிர்களிடையேகூடக் குடும்பமாக வாழும் உயிர்கள் தனி வாழ்வு வாழும் உயிர்களை வென்று பரவியுள்ளன. சமூகமாகக் கூடி வாழும் உயிர்கள், அங்ஙனம் வாழாத உயிரினங்களை வென்று வளர்ச்சி பெற்றுள்ளன. மனிதன் தனி வாழ்வு கடந்து குடும்ப வாழ்வு உடை ய வனாகவும், குடும்ப வாழ்வு கடந்து சமூகவாழ்வு உடைய வனாகவும் இருப்பதனாலே தான் உயிர்களிடையே தலைசிறந்த உயிரினமாகியுள்ளான். சமூகவாழ்விலும் தொடக்கக்கால மனிதனைப் போலக் குடும்பம் குலம் ஆகியவற்றுடன் நின்று விடாமல்; ஊர், நாடு, உலகம் என நாகரிக மனிதன் ஒற்றுமை எல்லை வளர்வதனாலேயே அவன் இயற்கையைத் தன் வயப்படுத்தி ஆள்பவன் ஆகியுள்ளான்.
விடுதலையார்வத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அதனை எதிர்த்து அமைக்கப்பெறும் ஒற்றுமை சில காலமே நிலவமுடியும் என்பதனையும், அது தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பதனையும் உலக வரலாறு முழுவதுமே காட்டுகிறது. அலெக்ஸாண்டர் பேரரசும், உரோமர் பேரரசும், தைமூர் பேரரசும் உடல் வலு, படை வலு ஆகியவற்றை மட்டுமே நம்பியிருந்தன. அவ்வலுவுக்குக் காரணமான வீரத் தலைவர்களின் கை ஓய்ந்தவுடன் வலியமைந்த அவ்வொற்றுமை களும் தாமே குலைந்துபோயின. மார்க்கஸ் அரிலியஸ், அசோகர், அக்பர் ஆகிய அருளாளர் தலைமையில் அப்பேரரசுகள் அமைந்த போதுங்கூட, அவை நிலைக்கவில்லை. பிரிட்டிஷ்பேரரசு விடுதலையார்வமுடைய பிரிட்டிஷ் மக்களுக்கு