பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

175

இதில் இன்றைய உலகின் முதல் வல்லரசுகளாகக் கருதப்படும் ஐந்துநாடுகளின் பிரதிநிதிகள் நிலையான உறப்பினர்களாகவும், கூட்டுப் பொறுப்பும் சிறப்புரிமையும் உடையவர்களாகவும் அமைந்துள்ளார்கள்.

(4) மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு மன்றம் ஒன்று நீங்கலாக, மற்றெல்லா உறுப்புகளிலும் உலகநாடுகள் சரிசமமான நிலையில், வேற்றுமையில்லாமல் உறுப்பாயுள்ளன. சிறப்பாக அமைப்பின் அடிப்படை உறுப்பான பொதுப் பேரவையில் உலகநாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் தனி முழுச் சுதந்தர உரிமையுடைய வராயும், சரிசமமான மொழியுரிமை உடையவராயும் உள்ளனர். வல்லரசுகளுக்கும், சின்னஞ்சிறு அரசுகளுக்கும் சரிசமமாக ஒரே மாதிரியான மொழியுரிமை இருப்பதால், ஐ.நா. அமைப்பு வல்லரசுகளின் வேட்டைக்காடு ஆய்விட வழியில்லை.

(5) இறுதியாக, சர்வதேச சங்கத்தின் பெருங்குறைபாடு,அது அரசாங்கங்களின் கூட்டுறவாய் மட்டும் இயங்கிற்று என்பதே. அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தும் மக்கள் வலுவும், மக்கள் ஆர்வத்தை எழுப்பி அவர்கள் ஆதரவைப் பெறவல்ல சிறப்புறுப்புகளும் நோக்கங்களும் அதற்கு இல்லை. ஐ.நா. அமைப்பில் தொடக்கத்திலிருந்தே இத்தவறு திருத்தப் பட்டுள்ளது.

66

“உலக நாடுகளின் மக்களாகிய நாங்கள்” எனத் தொடங்கும் ஐ.நா. உரிமை விளம்பரத்தின் வாசகமே, அது நாட்டரசாங்கங் களைக்கடந்து நாட்டு மக்கள் கூட்டுறவை நாடுகிறது என்பதைக் குறிப்பதாகும். மேலும், அடிப்படை மனிதவுரிமைகள் உரிமை விளம்பரத்தில் இடம் பெறுவதுடன், அது வற்புறுத்தப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்கான தனிக்குழுவும் அமைக்கப் பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக, உலகமக்கள் சமூக, பொருளாதார வசதிகளைக் கவனித்து, அவற்றின் நிலைகளை வளர்ப்பதற்காகச் சமூக பொருளியல் மன்றம் என்ற தனியுறுப்பும்: அதனால் நிறுவப்பட்ட தனியுறுப்பாகக் கல்வி, விஞ்ஞானம், பண்பாடு ஆகியவற்றை உலக அடிப்படையில் வளர்ப்பதற்கான 'ஐ.நா. கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக்கழகம்' (UNESCO) என்ற கிளை உறுப்பு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இத்துறைகளில் உழைக்கும் பிற சர்வதேச அமைப்புக்களுடனும்