பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

அப்பாத்துரையம் - 10

மக்களின் எதிர்காலத்தையும் அளாவியதாகும்?” என்பதை இப்பட்டயம் வற்புறுத்திற்று.

உரிமைப்பட்டயத்திலும், இதனை விளக்கிச் சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் பேசிய பேச்சுகளிலும், அறிவிப்புகளிலும் உள்ளீடாகப் பிற்காலத்து அடிப்படை மனித உரிமைகள் பற்றிய கருநிலைக் கருத்துக்கள் மிளிர்கின்றன. ரூஸ்வெல்ட்டு தனைப்பற்றிய விளக்கத்திடையேதான் பசி வறுமை உடைப்பஞ்சம் உறையுட்பஞ்சம் ஆகியவற்றிலிருந்து விடுபடும் உரிமை, தொழில் பெறும் உரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய நான்கு விடுதலை உரிமைகளைப் பற்றி விளக்கினார்:

66

'உலகநாடுகள் பலாத்காரத்தையும் போர்ச் செயலையும் ஒழித்துக்கட்ட முன் வரவேண்டும். எந்த ஒரு நாட்டின் சுதந்தரத்தின்மீதும் மற்றொரு நாடு தாக்குதல் நடத்த முடியாதபடி எல்லா நாடுகளும் உத்தரவாதமளித்து, நிலையான அமைதியைப் பேணுதல் வேண்டும். அத்துடன், ஒவ்வொருநாட்டு மக்களும் தத்தம் விருப்பப்படி தத்தம் அரசியல் முறையை வகுத்துக்கொள்ளும் உரிமை பெறுதல் வேண்டும். உலக வாணிகத்துறையிலும், உலகின் மூலப்பொருள் வளத்திலும் எல்லா நாடுகளுக்குமே சரிசம உரிமையும், சரிசமசந்தர்ப்பமும் இருத்தல் வேண்டும். கட்டற்ற கடலின் சுதந்தரம் இருக்க வேண்டும். உலகத் தொழிலாளரின் பொருளியல் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். உலகமக்கள் அனைவருக்கும் வறுமை, அச்சம் ஆகிய இரு தொல்லைகளிலிருந்து முழு விடுதலை ஏற்பட்டு, அவர்களிடையே பொருளாதார இணக்கமும் சமூகப்பாதுகாப்புக்கான உத்தரவாத உணர்வும் உண்டாதல் வேண்டும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் வகையில். அமைதியை நாடும் உலக நாட்டு மக்கள் யாவருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்க அரசாங்கங்கள் ஊக்கமும் ஆதரவும் தரும்.”

இவைகளே அட்லாண்டிக்கு உரிமைப்பட்டயம் உலகுக்களித்த உறுதிகள்.

நேசநாடுகள் அனைத்தும் இவ்வுரிமைப் பட்டயத்துக்கு ஆதரவு தந்தன. 1942 ஜனவரி முதல் தேதியில் இருபத்தாறு நேசநாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, அட்லாண்டிக்குப்