பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

||- -

அப்பாத்துரையம் - 10

நடைபெற்றது. அவர்கள் விடுத்த நான்கு வல்லரசுகளின் அறிக்கை மாஸ்கோ அறிவிப்பு' என வழங்கப் பெறுகிறது. அதில் அவர்கள் தங்கள் எதிரிகளை முறியடிக்கவேண்டி உலகப்போரில் தாங்கள் ஒன்றுபடுவது மட்டுமன்றி, அதுபோலவே அவ் வெற்றியின் பின்னும் உலக அமைதியைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றுபட்டு நடக்க உறுதி கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். உலகின் எல்லா நாடுகளும் சரிசம உரிமையுடன் கலந்து செயலாற்றத்தக்க உலக நாடுகளின் கூட்டுறவமைப்பு ஒன்று ஏற் டுத்துவது அவசியம்,' என்றும்

யக்கம்

அவர்கள் குறிப்பிட்டார்கள்.மாஸ்கோ மாநாட்டில் நான்கு வல்லரசுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துகள் விரைவில் திட்ட உருப்பெற்று வளர்ச்சியடைந்து வந்தன. உலக இய பிரசாரநிலை கடந்து அமைப்புருவாகத் தொடங்கிற்று. இதற்கிடையே இதே ஆண்டு டிஸம்பரில் பாரசீக நாட்டைச் சேர்ந்த டெஹிரான் நகரில் உலக மும்முதல்வர்கள் என்று கூறப்பட்ட ரூஸ்வெல்ட், சர்ச்சில், ஸ்டாலின் ஆகியவர்கள் வெளிநாட்டமைச்சர்களின் கருத்துரையை மீண்டும் ஆராய்ந்தார்கள். அவர்கள் முடிவு மாஸ்கோ முடிவை வலியுறுத்தியதுடன், சில கூறுகளில் அதனைக் கடந்து மற்றும் ஒரு படி மேற்சென்றது.

"கொடுங்கோன்மையையும் அடக்கு முறையையும் எந்த வடிவில், யார் கையாண்டாலும், அவற்றை நம் நாட்டு மக்களேயன்றி, உலகிலுள்ள மற்ற எல்லா நாடுகளின் மக்களுமே வெறுத்து வருகின்றார்கள். ஆகவே, பெரிது சிறிது என்ற வேற்றுமையின்றி, இவ்வெல்லா நாடுகளையும் ஒன்றுபடுத்தி, நாட்டு மக்கள் எல்லாருடைய அவா ஆர்வங் களையும் ஒரு முகமாக்கி நிழற்படுத்திக் காட்டி, உலக ஒற்றுமையிலும் அமைதியிலும் யாவரும் அக்கறை கொள்ளும் படி செய்தல் வேண்டும்”, என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். வெளிநாட்டமைச்சர் அறிவிப்பைவிட, இது பின்னும் தெளிவாக உலகமக்களை அறைகூவி அழைப்பதாயிருந்தது.

உலக இயக்கத்தின் இன்னொரு பண்பையும் மூவர் அறிவிப்பில் காணலாம். இதுவே, உலக இயக்கத்தில் சேரும் உறுப்பு நாடுகளின் சரிசமநிலையும் தன்முடிபு உரிமையும். இதில்