ஐக்கிய நாடுகளின் அமைப்பு
181
சரிசமநிலை உலக அரங்கில் குடியாட்சித் தன்மையைப் பேணுவது, பெரிய நாடுகளும் சிறிய நாடுகளும் உலக இயக்கத்தில் ஒரே நிலை பெறுவதால், சிறு நாடுகளுக்குப் பாதுகாப்பும் ஏற்படுகிறது. ஆனால், இச்சரிசமநிலையுடன் இடம் பெறும் தன் முடிபுரிமை என்ற பண்பு இருகூறு உடையது: தனி மனிதன் வகையில் குடியாட்சியில் தரப்படும் இன, வகுப்பு, மொழி, கொள்கை அடிப்படையான தனியுரிமைப் பாதுகாப்பை இது நாட்டு அசாங்கங்களுக்கும் கொடுக்கிறது. இதன்படி மதம், வகுப்பு, இனம், அரசியல் கொள்கை ஆகியவற்றில் உலக இயக்க அமைப்பு உறுப்புநாடுகளின் தனி உரிமைகளில் குறுக்கிடும் உரிமை தடைபடுகிறது. ஆனால், அதேசமயம் இவற்றை சாக்கிட்டும், உள்நாட்டுக் காரியங்கள் என்று கூறிக்கொண்டும், உறுப்பு நாடுகள் உலக அமைப்பின் செயலைத் தடை செய்யும் நிலை இதனால் சிலபல சமயம் ஏற்படக்கூடும். இத்தகைய அறநெறி மயக்கங்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனை உலக இயக்கத்தின் குறைபாடாகக் கருதுபவரும் உண்டு. ஆயினும், உலக இயக்கம் நாட்டரசாங்கங்களைப் பகைக்காமல் செயலாற்றி நல்லெண்ணத்தை வளர்ப்பதனாலும், நாட்டரசாங்கம் நடந்து மக்கள் அவா ஆர்வங்களை அது ஊக்குவதனாலும் இத்தடங்கல், இயக்கத்தின் வளர்ச்சியுடன் குறையவே வழியுண்டு.
66
"அவரவர் அவா ஆர்வங்களுக்கேற்ற வகையிலும், அவரவர் மனச்சான்றுகளுக்கேற்ற வகையிலும், உலக நாடுகளின் எல்லா மக்களும் கொடுங்கோன்மைக்கு ஆளாகாமல் வாழும் நாளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்ற மூவர் வாசகம், உலக இயக்கத்தின் உரிமைக் கட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை யாயினும், அதன் அன்புமுறை சார்ந்த உயர்குறிக்கோளையும் விருப்ப இலக்கையும் குறிப்பதாகும். 'எது உள்நாட்டுச் செய்தி? எது தன் முடிபுரிமைக்கு உரியது?' என்பவற்றில் கருத்து வேறுபாடு எழக்கூடுமாயினும், இது நாட்டரசாங்கங்களின் கடமையையும் குறிக்கோளையும் எடுத்துக்காட்டச் செய்து, அரசாங்கங்களையும் ளையும் இயங்கச் செய்ய வல்லது என்பதில் ஐயமில்லை.