188) ||-
அப்பாத்துரையம் - 10
2. ஐ.நா. பேரவையின் உறுப்பாக்கம், கடமைகள், உரிமைகள் ஆகியவை பற்றிய குழாம்:
இதில் நான்கு குழுக்கள் வேலை செய்தன. அவை முறையே (1) பேரவையின் அமைப்பு, நடைமுறை; (2) அரசியல் பாதுகாப்புச் செய்திகள்; (3) பொருளியல், சமூகக் கூட்டுறவு நடவடிக்கைகள்; (4) பொறுப்பாட்சி முறை ஆகியவை பற்றிய தேர்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட குழுக்கள்.
3. பாதுகாப்பு மன்றம், அதன் அமைப்பு, கடமைகள், உரிமைகள் ஆகியவை பற்றிய குழாம்:
இதிலும் நான்கு குழுக்கள் இருந்து வேலை செய்தன. இவை முறையே (1) பாதுகாப்பு மன்றத்தின் அமைப்பும் நடைமுறையும்; (2) நாடுகளிடையேயுள்ள சச்சரவுகளை அமைதி முறையில் தீர்த்துவைத்தல்; (3) அவற்றை வலியுறுத்துவதற்கான நடை முறைகள்: (4) திசைநிலப் பாதுகாப்புமுறை ஏற்பாடுகள் (Regional Society Arrangements) ஆகிய துறைகளுக்குரியவை.
4. உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் பற்றிய குழாம்:
இதுவும் இரண்டு குழுக்களுடையது. முதலாவது, உலக நடுநிலைத் தீர்ப்பு மன்றம் பற்றியும்; இரண்டாவது, சட்டத்துறைச் செய்திகளைப் பற்றியும் ஆராய்ந்தது.
மேற்கூறிய இந்நான்கு குழாங்களும், இவற்றினுட்பட்ட குழுக்களும், இவை தவிர வேறு நுணுக்கத்துறை சார்ந்த திறப்புக் குழுக்களும் உரிமை விளம்பர மூலப் பகர்ப்பின் பல பிரிவுகளைத் தனித்தனியாக எடுத்து உருவாக்கின. இப்பகர்ப்புப் பகுதிகள் எல்லாவற்றையும் ஒருமுக இணைப்புக் குழுவொன்று ஒருங்கிணைத்துத் தொகுத்து, இவற்றில் இருக்கக்கூடும். முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றை நீக்கி, இவற்றை உருவாக்கிற்று. இக்குழுவில் 14 உறுப்பினர் இருந்தனர். இவர்கள் தந்த உருவிலேயே ஐக்கிய நாடுகளின் உரிமை விளம்பரம் உலகநாடுகளுக்கும் மக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறு தனி நாட்டின் அரசியலமைப்பை வகுப்பதிலே கூடப் பல தொல்லைகளும் தொடக்குகளும் ஏற்படாமலிருப்ப