பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

அப்பாத்துரையம் - 10

இல்லாதிருந்தது. இதற்குக்காரணம் யாதெனில், சிறு நாடுகளில் ஒரு பகுதியே ஒன்றுபட்டு ஒரு குழுவாகச் செயலாற்ற முடிந்தது. சிறு நாடுகளில் பல பிரிட்டன், அமெரிக்கா முதலிய மேற்கு வல்லரசுகளுக்கு ஆதரவாகவும்; அடிக்கடி செயலாற்றின. வல்லரசுகளும் பெரும்பாலும் சிறிய அரசுகளைக் கூட்டாக எதிர்க்க விரும்பவில்லை; எதிர்க்க முடியவுமில்லை, ஏனெனில், அவைகளுக்குள்ளேயே பல தறுவாய்களில் வேற்றுமைகள் எழுந்தன. ஆயினும், பொதுவாக, ஒத்துப் போகவேண்டுமென்ற எண்ணம் வல்லரசுகளுக்குள்ளேயும்; வல்லரசுகள், சிறிய அரசுகளுக்குள்ளேயும் இருந்துவந்தன. எனவே, கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதெல்லாம் எந்தத் தெளிவான முழுப் பிரிவினையும் காணப்படாமலிருந்தது. அத்துடன் பெரும்பாலும் ரு சார்புகளும் சரிமச வலுவுடையனவாகவே இருந்ததனால், சமரச முயற்சிக்கும் விட்டுக்கொடுப்புக்கும் நிரம்ப இடமிருந்தது.

ஸான் பிரான்ஸிஸ்கோ மாநாட்டிலும் சரி, ஐ.நா அமைப்பு ஏற்பட்ட பிற்பாடும் சரி, நீடித்த முட்டுக்கட்டை நிலைகளுக்கும் சிக்கல்களுக்கும் பலத்த கருத்து வேற்றுமைகளுக்கும் காரணமாயிருந்த ஒரே செய்தி, பாதுகாப்பு மன்றத்தின் மறுப்புமொழியுரிமை (Veto Power) பற்றியதே. இது யால்ட்டா மாநாட்டில் வகுக்கப்பட்ட திட்டம். ஐ.நா. அமைப்புக் கூறுகளில் இஃது ஒன்றில் மட்டுமே ஆதரவு வல்லரசுகளுக்குத் தனி உரிமை வழங்கப்பட்டிருந்தது. எனவே, சிறு நாடுகள் இது வகையில் அடிக்கடி எதிர்ப்புக் காட்டியது இயல்பே. ஆயினும், இங்கும் பாதுகாப்பு வகையில் ஆதரவு வல்லரசுகளிடையே உள்ள ஒற்றுமையின் அவசியத்தை யாவரும் உணர்ந்தாலும், ஐ.நா. அமைப்பிலும் அதன் திட்டத்திலும் ஏற்படக்கூடிய ஒரே பலக்குறைவு வல்லரசுகளிடையே ஏற்படக்கூடும் போட்டி ஒன்று தான் என்பதை யாவரும் அறிந்திருந்தலும் இச்சிக்கல் ஒரு திறமைப் போட்டியாக மட்டும் இருந்ததேயொழிய, வெற்றி தோல்வித் தேர்வாக வளரவில்லை.

மாநாட்டின் குழு முறை வேலைகள் எதிர்பார்த்ததைவிட நீடித்தன. ஆனால், உலகச் சூழ்நிலைகளிடையே மாநாட்டினை நீட்டிக்கொண்டு போகவோ, கடத்திப்போடவோ வழியில்லை. ஆகவே, பல நடைமுறைகள் விரைவாக்கப்பட்டும், சுருக்கப்பட்டும்