ஐக்கிய நாடுகளின் அமைப்பு
195
இயங்குவது. போர் ஒழிப்பும், அமைதி காப்பும், முந்திய உலக அமைப்புகளுக்கும் உலக இயக்கத்துக்கும் நோக்கமாகவே இருந்தாலும், அதனை நாட்டு அரசாங்கங்களின் பொறுப்பு வாய்ந்த அமைப்பாக்கி, மக்கள் அவா ஆர்வங்களைத் தூண்டி ஈடுபடுத்திய அமைப்பு ஐ.நா. அமைப்பே.
கு
இன்று ஐ.நா. அமைப்பு உலகநாடுகளிடையே ஒற்றுமையும் தொடர்பும் வளர்க்கும் அமைப்பாக மட்டுமே இயங்குகிறது. ஆயினும், இத்தொடர்பு வளர்வதற்கான வழிவகைகளும், அவற்றுடன் மக்கள் வாழ்க்கைத் தொடர்பு வளர்வதற்கான வகைதுறைகளும் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளின் அரசியலனுபவம் பெற்ற அறிஞரும், பல நுணுக்கத் துறையாராய்ச்சி வல்லுநரும் அதன் கட்டமைப்பில் ஈடுபட்டிருப்பதனால், அஃது எதிர்கால வளர்ச்சிகளுக்கு இட காடுக்கும் வகையில் உறுதியான அடிப்படையுடனும், எளிதில் மாற்றியமைக்கத் தக்க, வளர்ச்சியடையத் தக்க நெகிழ்ச்சித் திறத்துடனும் வகுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஐ.நா. அமைப்பு உலக ஒற்றுமை நலனையும், நாட்டின் தனித்தனி நலன்களையும், அரசாங்கங்களையும், மக்களையும் ஒரே பேரிணைப்பில் இணைக்கும் ஓர் ஒப்பற்ற ஒற்றுமைச் சாதனமேயாகும் என்பதில் ஐயமில்லை. அது அத்துடன் வருங்காலத்தில் ஓருலக ஆட்சியை அமைக்கத் தக்கது என்பதும் நம்பிக்கைக்குரிய செய்தியே.
ஐ.நா.அமைப்பின் வருங்காலவளர்ச்சி இத்துடன் நிற்பதன்று. அது நாடு, இனம், வகுப்பு முதலிய எல்லைகளையெல்லாம் தடுத்து வைக்கும் - அல்லது பிரித்து வைக்கும் எல்லைகள் என்ற நிலையிலிருந்து மாற்றி, வகுத்துத் தொகுக்கும் கூறுகள் ஆக்க வேண்டும்.பிரிவினைக் கோடுகள் கடக்க முடியாத மலைகளாய் இராமல், நீரை ஆங்காங்கே தேக்கி வைக்க உதவும் பாத்திகளின் கரைகளாகவும், நீரைக் கொண்டு சென்று பாத்திகளை வளர்க்கும் வாய்க்கால்களாகவும், பாத்திகளைச் சென்று பார்ப்பவர்கள் பயிரை அழிக்காது நடந்து செல்லும் வரப்புகளாகவும் அமைய வேண்டும். இம்முழு நிறைபயன் ஏற்படுவதற்கு நாள் செல்லக்கூடும்: அதில் பல இடையூறுகள், சிக்கல்கள், முட்டுக்கட்டைகள் ஏற்படக்கூடும். ஆனால், அமைப்பின்