பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 10

198 || உழைப்பையுங்கூடப் பெரும்பாலும் அழிவுப் போர்த்துறைக்கே பயன்படுத்துகிறோம். இக்கால விஞ்ஞானம் பெரிதும் அழிவு விஞ்ஞானமாகவே வளர்ந்துவருவதன் காரணம் இதுவே. மக்களுக்கு நல்வாழ்வையூட்டும் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஓர் ஆராய்ச்சியாளனைவிட, அழிவுப் படைக்கருவிகளைக்

கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளனுக்கும், அவ்வாராய்ச்சித் துறைக்குமே இன்றைய உலக சமூகத்தில் பெருமையும், ஆதரவும், ஊக்கமும் தரப்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

உண்டுபண்ணி,

(2) ஐ.நா.அமைப்பு உலகநாடுகளிடையே நட்புணர்ச்சியையும் நல்லெண்ணத்தையும் அவற்றிடையே ஒத்துழைப்பையும் ஒருமுகப்பட்ட செயலையும் வளர்க்கக்கடமைப் பட்டுள்ளது. போர் அச்சத்துக்கும் போர் பற்றிய ஐயங்களுக்கும் அழிவுப் போட்டிகளுக்குங்கூடப் பெரும்பாலும் உள்ளார்ந்த பகைமையும் தப்பெண்ணங்களுமே காரணம். போருக்கான சூழ்நிலைகளை உண்டுபண்ணும் இவற்றைச் சமரசப் பேச்சாலும், இடையீட்டாளர் அறிவுரை நல்லுரைகளாலும் போக்கி, நேசம் வளர்ப்பதுதான் இச்சூழ்நிலையைப் போக்க வழியாகும்.

இன, சமய, மொழி, வகுப்பு வேறுபாடுகள் காரணமாகவும், பழக்க வழக்க வேறுபாடுகள் காரணமாகவும், இடவேறுபாடு கால வேறுபாடு காரணமாகவும், இவற்றின் சார்பான தலைமை, நாட்டுத் தலைமைப் பூசல் காரணமாகவும், தப்பெண்ணங்களும் போட்டியும் பகைமையும் வளர்வதுண்டு. உலக இயக்கம் இவற்றை நீக்கும் கடப்பாடும் திறமும் உடையது. ஏனெனில், இவையனைத்தும் ஏறக்குறைய ஒரே உலகில் ஏற்பட்ட தற்காலிகக் கூறுபாடுகளேயன்றி, நிலையான வேறுபாடுகளல்ல. இவற்றிடையே உள்ள எல்லைக்கோடுகள் ஒரே வயலிடையே உள்ள வரப்பு வாய்க்கால்களைப் போலவும், ஒரே வீட்டிலுள்ள அறைச்சுவர்களைப்போலவும் அமைந்தவைகளேயன்றி, நிலை யாகப் பிரித்து வைக்கும் மலைகளல்ல.

வயலிலுள்ள வரப்பும் வாய்க்காலும் கூறுபாடுகளிடையே சமநிலையாக்கவும், வயலைப் பார்க்க வருவோர் பயிரை அழிக்காமல் நடக்கவும், பயிருக்கு உயிர் போன்றுதவும் நீரை எங்கும் கொண்டு பரப்பவுமே ஏற்பட்டுள்ளன.வீட்டின் சுவர்கள்