ஐக்கிய நாடுகளின் அமைப்பு
199
அறைக்குப் பாதுகாப்பாக அமைபவைமட்டுமல்ல; அறை களிடையே போக வர வாயில்களும் கதவுகளும், வெளியிலுள்ள காற்றை உலாவவிடப் பலகணிகளும் புழைவாயில்களும் இவைபோலவே நாட்டெல்லைகள்,
உடையவைகளே.
இனமொழி வகுப்பெல்லைகள், சரிசமவளர்ச்சியும் சூழ்நிலைக் கேற்ற பாதுகாப்புகளும்
தர அமைந்தவையேயன்றி, இடையீடிலாப் பிரிவினை மதில்களல்ல என்பதை மனித இனம் மறவாதபடி அறிவுறுத்துவதும், அந்தப் படிப்பினையைச் செயற்படுத்தி மனிதரின் செயல்களை ஒரு முகப்படுத்துவதும் உலக இயக்கத்தின் பொறுப்பு ஆகும்.
உறுப்புக்கு உறுப்புப் பகைமை ஏற்பட்டால், அதனால் உடல் அழியும்; உறுப்புகளும் கேடுறும். உறுப்பை உடலின் உறுப்பாக எண்ணாமல், தனிக் கூறுகளாக எண்ணுபவர் இதனை உணரமாட்டார். அது போல நாடும் நாடும் பகைமை கொண்டால், பொது உலக நலன் கேடுறும். அதனால், நாடுகளும் நாளடைவில் நலிவுற்றே தீரும். ஏனெனில், மனித நலன்களும் மனித நாகரிக நலன்களும் நாடுகடந்த உலக அடிப்படையிலேயே அமைந்துள்ளன. நல்லறிஞர் இவ்வடிப்படை ஒற்றுமை கண்டு, அதனைச் சுட்டிக்காட்டி, நாடுகளிடையே
நேச
மனப்பான்மையை வளர்த்தல் கடன். பண்டைச் சோழர் மரபில் தந்தையும் மகனும் தம்முள் எதிர்த்துப் போரிட முனைந்த போது அந்நாளைய தமிழான்றோராகிய புலவர் கூறிய அறவுரை, இவ்விடத்தில் நினைவு கூறத்தக்கது.
"போர் என்றால், இருவருள் ஒருவரே வெற்றி பெற முடியும். எவர் வெற்றி பெற்றாலும், மற்றவர் தோற்பது உறுதி. ஆனால், எவர் தோற்றாலும், தோற்பது நும் குடியாகவே இருக்கும். ஆதலால், குடி மதிப்பழிக்கும் இச்செயல் தவிர்க,” என்றார் அப்புலவர் பெருமான். இதே அறிவுரையை நாடுகளிடையேயும் நல்லறிஞர் கூறலாம். 'இரண்டு நாடும் மனித இனம் சார்ந்ததே. எந்நாடு வென்றாலும், மற்றொருநாடு தோற்கும். எந்நாடு தோற்றாலும் தோற்பது மனித இனமே. குடும்பச் சண்டையிலும் கட்சிச் சண்டையிலும் நாட்டறிஞர் கூறும் மேற்குறிப்பிட்ட நல்லுரைகளைப் போலவே, நாட்டுச் சண்டைகளிலும் நாடுகளிடையே அருளாளர் கூறத்தகும் இந்த