பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

அப்பாத்துரையம் - 10

நல்லுரையை உலக அமைப்பு இக்கால அரசியல் முறையில் செய்யக் கடமைப்பட்டது.

கோரி

நாட்டரசாங்கம் இனம், வகுப்பு, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, நடுநிலை நின்று அடிப்படை நன்மை எல்லாரையும் சமரசப்படுத்துவது போலவே, உலகப் பிரிதிநிதிகள் அடங்கிய உலக அமைப்பும் உலக நாடுகளின் வேறுபாடுகளைக் களையும் தகுதியுடையது.

(3) ஐ.நா. அமைப்பு உலகில் நாடுகளிடையேயும் மக்களிடையேயும் கூடியமட்டும் சரிசம நிலையையும் தன் முடிபுரிமையையும் (சுயநிர்ணய உரிமை) பேணி வளர்த்துச் சரிசம சந்தர்ப்பங்களையும் அளிக்க வேண்டும். சரிசம நிலையில்லாத இடங்களிற்கூட இருக்கும் நிலையைத் தற்காலிகமாக ஏற்று, வலிமையுடைய உறுப்புக்கும் வலிமை குறைந்த உறுப்புக்கும் இடையே நேச மனப்பான்மையை வளர்த்து, 'ஒருவர் வலிமை மற்றவர்க்கும் வலிமைதருவதே; ஒருவர் வலிமைக்கேடு மற்றவர்க்கும் வலிமைக்கேடே,' என்பதை உணர்த்தி, அவர்களைச் சரிசம நிலை நோக்கி மனமொத்து வளரச் செய்தல் வேண்டும்.

சரிசமநிலையே, நட்பின் அடிப்படை. நட்பே. ஒற்றுமையின் அடிப்படை. ஐ.நா. அமைப்பு இதனை நன்கு மதிப்பதாலேயே பாதுகாப்பு மன்றம் நீங்கலான உறுப்புக்களெல்லாவற்றிலும் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் சரிசம மொழியுரிமை அளித்துள்ளது. அத்துடன் பெரு வல்லரசுகள், சிறுநாடுகள் ஆகியவற்றின் சமத்துவமும் முக்கிய உறுப்புகளில் பேணப்படு

றது.

சரிசம நிலையின் உரையாணியாய் இயலும் பண்பு, தன் முடிபுரிமையே. உறுப்புகள் இவ்வமைப்பில் தம் விருப்பப்படி சேர்ந்து, தம் விருப்பப்படி விலகக் கூடியவை என்பதையும், ஆகவே, அவற்றின் செயல்கள் தன்மதிப்புரிமையுடனும் பொறுப் புடனும் கூடியவையே என்பதையும் இது வலியுறுத்துகிறது. தன்முடியுரிமை அற்ற இடங்களில் உறுப்புகள் செய்யும் முடிபுக்கு அவற்றின் பொறுப்பும் மதிப்பும் இருக்கமுடியாது. அச்சத்தாலும் கைக்கூலி ஆசையாலும் சான்று கூறுபவன் சான்றுரை போல, அது அவர்கள் உள்ளார்ந்த விருப்பார்வத்தையும் செயலுறுதியை யும் தூண்டாது.