பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

205

சட்டம் (Habeas Corpus Act) இத்தகையது. இது பல நாடுகளில் இருந்தாலும், உலக அடிப்படையில் இது ஒப்புக்கொள்ளப் பட்டாலன்றி, பிற்போக்கான நாடுகளில் இது விரைவில் பயன் தாராது. உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களிலிருந்து தனிமனிதன் உரிமைக்குப் பாதுகாப்புத் தேவைப்படுவதைப் போலவே, சட்டங்களைப் பாதுகாக்கும் அரசாங்கங் களிலிருந்தும், அவற்றை நிறைவேற்றும் வழக்கு மன்றங்களி லிருந்துங்கூடத் தனி மனிதனுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்புத் தேவை. இப்பாதுகாப்பை அளிப்பவை பத்திரிகைகளே. அவற்றின் சுதந்தரம் அரசாங்கங்களால் பேணப்பட வேண்டும். இங்கே கட்சி, கோட்பாடு வேறுபாடுகள் சட்டத்திலும், அதன் நிறைவேற்றத்திலும் இடம் பெறாமலிருத்தல் வேண்டும் என்பது மிகமிக உயிர்நிலையான செய்தி ஆகும்.

இவ்வெல்லாவகை அடிப்படை உரிமைகளையும் வகுத்து விளக்கி, இவற்றுக்குப் பாதுகாப்பும் வலியுறுத்தும் தருவதே மனித உரிமையின் நோக்கம்.

(7) இறுதியாக, மேற்கூறிய எல்லா நோக்கங்களும் நிறைவேறும்படி அரசாங்கங்களிடையிலும் நாட்டு மக்களிடையிலும் ஒத்துழைப்பையும் கூட்டுச் செயலையும் பெருக்குவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இது இந்நோக்கங் கொண்ட நிலையங்களை உண்டுபண்ணுவதாலும், வளர்ப்பதாலும், அத்தகைய பல வகைப்பட்ட நிலையங்களை இணைப்பதாலுமே முடியக்கூடும். சமூகப் பொருளியல் மன்றம், அதன் சார்பான ஐ.நா. கல்வி, விஞ்ஞான, பண்பாட்டுக் கழகம், இதற்கு முன்னோடியாயிருந்த ஐ.நா. நல்லாக்க மறுசீரமைப்பு மன்றம் முதலிய கிளை உறுப்புக்கள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்புப் போன்ற பிற

ணை அமைப்புகள் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றின் ஒத்துழைப்புடனும் செயலாற்றுவதுடன், அவற்றின் வேலை முறைகளை ஒருமுகப்படுத்தவும் ஐ.நா. இயக்கம் பாடுபடுகிறது.

அடிப்படைத் தத்துவங்கள்:

மேற்கூறப்பட்ட நோக்கங்களைச் செயலிற்கொண்டு வர ஐ.நா. அமைப்புப் பல கிளை மன்றங்களையும், நிலையங்களையும்,