பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(208

அப்பாத்துரையம் - 10

வலியுறுத்துகிறது. மேலும், தொடர்புடைய எல்லா நாடுகளுக்கும் இனங்களுக்கும் நேர்மையான முடிவு ஏற்படாதவிடத்தில், சரிசமநிலை பாதிக்கப்பட்டு, மனக்கசப்புகள் வளர இடமேற்பட்டுவிடும். ஆகவே, நேர்மையும் இங்கே வற்புறுத்தப் பெறுகிறது.

(4) மற்ற நாடுகளுடன் கொள்ளும் தொடர்பு வகையில் எந்த உறுப்புநாடும் மற்ற நாடு அல்லது நாடுகள் மீது பலாத்காரத்தைக் காட்டி அச்சுறுத்தவோ, அதன் அரசியல் சுதந்தரத்துக்கு ஊறு நாடவோ, அல்லது வேறு எந்த வகையிலாயினும் உலகநாடு களின் உரிமை விளம்பரத்தின் நோக்கங்களுக்கு மாறுபட நடக்கவோ செய்யக்கூடாது. இத்தத்துவத்தின் குறிக்கோள் வெளிப்படையானது. இது நாடுகளின், சிறப்பாகச் சிறு நாடுகளின், தன்னாட்சிச்

சுதந்தரத்தை வலியுறுத்திக் காப்பதுடன், படை வலியினால் போரெழுப்புவதையும் வன்மையாகக் கண்டிக்கிறது.

(5) ஐக்கிய நாடுகளின் உரிமை விளம்பரத்தின்படி, ஐ.நா. அமைப்பு நடவடிக்கையிலீடுபடும் சமயம், எல்லா உறுப்பு நாடுகளும் அதற்கு உதவி செய்யும் கடமையுடையவை. அத்துடன் ஐ.நா. அமைப்பின் நடவடிக்கைக்கு ஆளான எதிரி நாடுகளுள் எதற்கும் எந்த உறுப்பு நாடும் எத்தகைய உதவியும் செய்யக்

கூடாது.

ஃது, இரண்டாவது தத்துவத்தில் கூறப்பட்ட உறுப்பினர் கடமைகளுள் முக்கியமான ஒரு கடமையை வகுத்துக் கூறி, அமைப்பை வலுப்படுத்துகிறது. எதிரி நாடுகள் எவை என்பதைத் தீர்த்துக்கூறும் உரிமை அமைப்பிற்கே என்பதையும், எதிரிக்கு ஆதரவு தருவது ஐ.நா. அமைப்புக்கு எதிரியாவது என்பதையும் இஃது எடுத்துக்காட்டி எச்சரிக்கிறது. நடுநிலைத் தீர்ப்பு மன்றத்திற்கும் அமைப்பிற்கும் இது வலுத்தருகிறது.

(6) உலக அமைதியையும் நலத்தையும் பேணுவதற்கு அமைப்பில் உறுப்பாகச் சேராத நாடுகளும் ஒத்துழைப்பது இன்றியமையாதது. ஆதலால், அத்தகைய நாடுகளும் உரிமை விளம்பரத்திற்கண்ட தத்துவங்களை மதிக்க வேண்டுமென்று ஐ.நா. அமைப்புக் கோருகிறது.