பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 10

210 ||__ _ அமைப்புகளுடனும் நாடுகடந்த உலக அமைப்புகளுடனுங்கூட, அது தொடர்பு கொள்ள நாடுகிறது. “இவையனைத்தும் உள் நாட்டுச் செய்திகளில் தலையிடுவனவல்லவா?' என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், இம்முரண்பாடு உண்மையில் ஐ.நா. அமைப்பின் தற்காலிக க நடைமுறை, அதன் காலங்கடந்த உயர்குறிக்கோள் ஆகியவற்றிடையே எழுந்துள்ள முரண்பாடேயாகும். இத்தத்துவம், அதன் தற்காலிக நடைமுறையை மட்டுமே சார்ந்தது. கலை, பண்பாடு முதலிய அமைப்புகள் அதன் எதிர்கால வளர்ச்சி நோக்கியவை. ஆயினும், பிந்திய இனங்களில் அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளிடம் தொடர்பு கொள்ளும்போதும், பிற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும்போதும், அதனதன் சார்பில் தொடர்புள்ள நாட்டரசாங்கங்களுடனும் அவற்றின் பிரதிநிதிகளுடனும் கலந்துகொண்டே அது செயலாற்றுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். ஆகவே, மேலீடாகத் தோன்றும் இம்முரண்பாடு உண்மையில் முரண்பாடன்று என்பதைக் காணலாம். விளக்கமாகக் கூறினால், அது இக்கால நடைமுறை ஒழுங் கமைப்பின் அடிப்படையிலேயே, எதிர்கால வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது என்னல் வேண்டும்.

நடைமுறையும் வளர்ச்சியும் முரண்பட்டுக்காணும் இக்காட்சி, ஐ.நா. அமைப்பின் இன்னொரு கூற்றில் இதனினும் முனைப்பாகக் காணப்படுகிறது. இதுவே பொறுப்பாண்மைத் தத்துவமும் அதனைச் செயலாற்றும் பொறுப்பாட்சி மன்றமும் ஆகும். முதல் உலகப் போர் முடிவில் தோல்வியுற்ற எதிரிநாடுகளின் ஆட்சியிலிருந்த நாடுகளும் குடியேற்ற நாடுகளும் எதிரி ஆட்சியிலும் விடப்படாமல், சுதந்தர ஆட்சியாகவும் விடப்படாமல், இடைத்தர ஆட்சிநிலையில் வைக்கப்பட்டன. அவற்றை நேசநாடுகள் தத்தம்மிடையே பங்கிட்டு அவற்றின் நல்லாட்சிக்கு உறுதி கூறின. சர்வதேச சங்கம் அவற்றை அவர்கள் பாதுகாப்பாட்சி (Mandates)களாக வகுத்தமைத்தது. சில பகுதிகளைச் சர்வதேச சங்கம் நேராகவோ, பிற நேசவல்லரசுக் குழு மூலமோ ஆட்சி செய்ய ஏற்றுக்கொண்டது. சர்வதேச சங்கம் 1946இல் கலைக்கப்பட்ட போது ஐ.நா. அமைப்பு