பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212) || – –

அப்பாத்துரையம் - 10

பாதுகாப்பு நாடுகள் வகையிலும், இதுபோன்ற தற்காலச் சூழ்நிலை நிகழ்வு நிலைகளிலும் சர்வதேச சங்கத்தின் நிலை பெரிதும், ஐ.நா. அமைப்பின் நிலை ஓரளவும் இரண்டாக மானவை என்பதில் ஐயமில்லை. தென்னாப்பிரிக்கா, கிழக்காப்பிரிக்கா வகையில் நாம் இதனைத் தெள்ளத் தெளியக் காணலாம். இங்கே இந்திய மக்கள், ஆசிய மக்கள் உரிமைகள் மட்டுமன்றி, ஆப்பிரிக்காவுக்குரிய பழங்குடி மக்கள் உரிமைகள்கூடத் தென்னாப்பிரிக்கா வெள்ளையர்

அரசாங்கங்களின் உள் நாட்டுச் செய்திகளாக விடப்பட்டுள்ளன. இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலைகளில் ஐ.நா. அமைப்பின் போக்கு, பிற்பட்ட நாடுகளின் பக்கம் சாய்வது அதன் வலிமையையும், பிற்பட்ட நாடுகளுக்கு ஏற்படக்கூடிய வலிமையையும், மட்டுமே பொறுத்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், ஐ.நா. அமைப்பின் நோக்கம் அவ்வமைப்பின் நடைமுறையையும் அதன் தற்கால வலுவையும் கடந்து தொலை நோக்குடையது என்பதற்குத் தடையில்லை. ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் முன்னேற்றம் அடைவதன் மூலமாக மட்டுமே ஐ.நா. அமைப்பில் இந்த நோக்கம் நடைமுறையில் வலுப்பெற முடியும். அந்நிலை வரும் வரையில் இத்தகைய செய்திகள் எப்போதும் உள்நாட்டுச் செய்திகள் என்று ஒருசாராராலும், உலகச் செய்தி என்று மறுசாராராலும் கூறப்பட்டே வரும். ஏனெனில், இத்தத்துவத்தின் வாசகத்திலுள்ள பெருஞ்சிக்கல், எது

உள்நாட்டுச் செய்தி, எது உலகச் செய்தி?' என்பதை வரையறுக்க முடியாதிருப்பதேயாகும். ஆயினும், மனித உரிமைகள், ஐ.நா. அமைப்பின் குறிக்கோளை எடுத்துக்காட்டி வலியுறுத்தப் போதியவை.

ஐ.நா. அமைப்பின் எதிர்கால வலிமை, வல்லரசுகளிடையே அது போட்டியைச் சமாளிக்கும் திறத்தையும், உலக மக்களிடையே அது பற்றிய அறிவும் அக்கறையும் ஆதரவும் வளர்வதையுமே பொறுத்தது. ஆனால், குறிக்கோள் நோக்கி அது வளரும் வளர்ச்சி பெரிதும், அதில் ஈடுபட்ட சிறு நாடுகளும் அதன் மக்களும் பெறும் ஒற்றுமையையும் வலிமையையும் பொறுத்ததேயாகும். சிறப்பாக, இந்தியா, சீனா போன்ற ஆசியநாட்டு மக்களும், ஆப்பிரிக்கப் பழங்குடியினராகிய நீகிரோவரும், உலகில் முற்போக்கடைந்துவிட்ட வெள்ளையர்