பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(216) II.

அமைப்பில்

அப்பாத்துரையம் - 10

சார்பில்

பொறுப்பாண்மைத்துறையின்

துணைப்பொதுச் செயலாளராயிருக்கும் விக்டார் ஹூ என்ற சீனர் தம் தாய்மொழியைப் போலவே ஃபிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற மேல்நாட்டு மொழிகளிலும் பேசவும் எழுதவும் கூடியவராம்! இவைபோதாமல், அவர் தம் வாழ்நாளுக்குள் ஐக்கியநாடுகளின் எல்லா மொழிகளையுமே கற்றுத்தேர்ந்துவிடும் உறுதியுடன் உழைக்கிறாராம்!

ம்

ஐ.நா. அமைப்புக்கு உலகப்பற்றும் நடுநிலையுணர்வும் உடையவர் மட்டுமன்றி, உலகறிந்த பல துறைச் சான்றோர்களும், வல்லுநர்களும், நுணுக்கத்துறையினரும், எழுத்தாளரும் தேவை. பல நாடுகளின் முதலமைச்சராயிருந்தவரும், வெளி நாட்டமைச்சராயிருந்தவரும், படைத்துறை வல்லுநரும், விஞ்ஞானிகளும், கல்லூரி ஆசிரியரும், நூலாசிரியரும், பத்திரிகையாசிரியரும் (சிலர் தம் பணிகளைத் துறந்துகூட,) ஐ.நா. அமைப்பில் பங்கு கொண்டுள்ளனர். அமைப்பாளரும் எல்லாத் துறையிலும் திறமையுடையவர்களை போட்டித்தேர்வுகள் மூலமாகவும் தேர்ந்தெடுக்கின்றனர்.

நேரடியாகவும்

கூடுமான போதெல்லாம் திறமைக்கடுத்தபடி எத்தனை வேறுவேறு நாட்டுமக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியுமோ, அத்தனை நாட்டுமக்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கின்றனர். ஆனால், எந்நாட்டின ராயினும் பணியேற்ற பின் அவர்கள் உலகக்குடிகள் ஆய்விடுகின்றனர். உலக நாட்டுக்கே, அதாவது ஐ.நா. அமைப்புக்கே நாட்டுப் பற்றுரிமையுடையவராயிருப்பதாக அவர்கள் பணியேற்பின் போது உறுதி செய்து கொடுக்கின்றனர்.

ஐ.நா. அமைப்பின் மிக உயர்ந்த முதற்பணியாளர் அதன் பொதுச் செயலாளரேயாவர். இவர் பாதுகாப்பு மன்றத்தின் பரிந்துரைமீது ஐ.நா. பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர் பணியமர்வுக்குரிய காலம் ஐந்தாண்டுகள். ஐந்தாண்டுகளுக்குப் பின் இவர் மீண்டும் தேந்தெடுக்கப்படும் உரிமையுடையவர். இவருக்கு ஆண்டுக்கு 20,000 அமெரிக வெள்ளி (ரூ.50,000) வரியிலா ஊதியமாகத் தரப்படுகிறது. இவர் பணிமனைச் செலவுகளையும் அமைப்பே ஏற்றுக்கொள்ளுகிறது. முதல் பொதுச்செயலாளராக இப்போதிருப்பவர் திரு.