ஐக்கிய நாடுகளின் அமைப்பு
225
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அறுவருள் ஆஸ்திரேலியா, பிரேஸில், போலந்து ஆகியவற்றின் பிரதிநிதிகள் இரண்டு ஆண்டுக்காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மெக்ஸிக்கோ, ஹாலந்து. எகிப்து நாட்டினர் ஓராண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின் கூறப்பட்ட மூன்றின் இடங்களிலும் இரண்டாம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பெல்ஜியம், கொலம்பியா, ஸிரியா ஆகிய நாடுகளுக்குரியவர்.
இவ்வுறுப்பினர் தவிர, உறுப்பினர் அல்லாத பேரவை உறுப்பு நாட்டினரோ, பேரவை உறுப்பினர் அல்லாத பிற நாட்டினரோகூட, அந்நாட்டின் செய்திகள் தேர்ந்தாராயப் படும்போது தனிப்பட அழைக்கப் பெற்று மன்றக்கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். ஆயினும், இவர்கள் பார்வையாளர் போன்றவர்களே: மன்றத்தின் மொழியுரிமையில் இவர்கள் கலந்துகொள்ள முடியாது.
மேலே
பாதுகாப்பு மன்றத்தின் தனிச்சிறப்புக்கள் பல: (1) மொழியுரிமைபற்றிய தனிவேறுபாட்டை குறித்துள்ளோம். (2) அதன் தன்சார்பும், தன்னுரிமையும் மேலே காட்டப்பட்டன. இவை தவிர, வேறு பல தனிப்பண்புகளும் அதற்கு உண்டு. (3) அது ஒன்றே ஐ.நா. அமைப்பின் நிலையான தொடர்ச்சியான உறுப்பு. அது எப்போதும் செயலாற்றும் உறுப்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. (4) தலைமையிடத்தில் அது குறிப்பிட்ட காலங்களில் கூடுவதன்றி, எந்தச் சமயத்திலும் உலகின் எந்தப் பகுதியிலும் சென்று கூடலாம். கூட்டமில்லாத காலம் இடைவேளைக் காலம் போன்றதாகுமே அன்றிச் செயலாட்சியற்ற காலமாகக் கணிக்கப்படாது. அதன் பணித்துறை ஓய்வொழிவின்றி விழிப்புடன் செயலாற்றுவதாகவே இருக்கும். (5) பாதுகாப்பு மன்றத்துக்கு தன்னுரிமையாகக் குழுக்களும் கிளைக்குழுக்களும் அமைக்கும் உரிமையும், தேவைப்பட்டால் உறுப்புகள் அமைக்கும் உரிமையும் உண்டு. (6) பாதுகாப்புக்குத் தேவையான செய்திகளில் பொதுச்செயலாளர் மூலமாகவோ, பேரவையின் மூலமாகவோ, நடுநிலைத்தீர்ப்பு மன்றம், சமூக பொருளியல் மன்றம், தனி உறுப்புநாடுகள், அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் பேச்சு நிகழ்த்தவும், பாதுகாப்பு
கிளை