(226) ||-
அப்பாத்துரையம் - 10
நடவடிக்கை பற்றிய ஒப்பந்தங்கள் அமைக்கவும், மன்றத்துக்கு உரிமை உண்டு. (7) மன்றம் ஒன்றே போர் நடவடிக்கைக்கு வேண்டிய செயல்களில் இறங்கவும், உறுப்பு நாடுகள் அல்லாதவற்றின் முறையீட்டைப் பேரவை மூலமோ, நேரிலோ கேட்கவும், உறுப்பு நாடுகளின் போர் நடவடிக்கை உதவி, படைப்போக்குரிமை உதவி கோரவும் அதிகாரம் உடையது. (8) பாதுகாப்பு நடவடிக்கைகளில் பேரவையின் உரிமை முழுவதும் பாதுகாப்பு மன்றத்திற்கு ஒப்படைக்கப்படுவதால், அது பேரவையின் சார்பில் முழு அமைப்பின் உரிமையையும் பெற்றுச் செயலாற்றுகிறது.
பாதுகாப்பு மன்ற உறுப்புகளாகிய நாடுகள் நடவடிக்கை கோரி, அது நடைமுறைக்கு வருமளவும், பாதுகாப்புமன்றத்தின் நிலையுறுப்புகளான ஆதரவு வல்லரசுகள் தாமே கூட்டாகச் செயலில் இறங்கும் பொறுப்புடையவை. இதுவும் நடைமுறைக்கு வரும் வரையில், தாக்கப்பட்ட உறுப்பு நாட்டுக்குத் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் உரிமை உண்டு.
பாதுகாப்பு மன்றத்தின் செயல் முறையில் மூன்று பகுதிகள் உண்டு: (1) சமரசமுயற்சிகள், (2) தடை முறைகள், (3) நடவடிக்கைகள். முதற்பகுதியாகிய சமரசமுயற்சிக் கட்டத்தில் அது உறுப்புநாடு பகுதியிலும் பிறநாடுகளிலும் நேரில் அவ்வந்நாட்டு அரசாங்க இணக்கம்பெற்று நிலைமைகளைச் சென்றாராயவும், பேச்சுகள் நடத்தவும், நடுநிலைத் தீர்ப்புக்குப் பரிந்துரை தரவும், நடுவர் அமர்த்தவும், நடுநிலைத் தீர்ப்பு மன்றத்துக்குக் கட்சியினர் சார்பில் முறையிடவும் உரிமை யுடையது. இதேகட்டத்தில் அவரவர் நாட்டுக்குரிய திணை நிலத்தில் திணைநில அமைப்புகளிருந்தால் திணைநிலச் சமரச ஏற்பாடுகளுக்கு (Rgional Arrangements) ஊக்கமளிக்கலாம். ஐரோப்பியத் திணைநில உறவமைப்பு (European Regional Relations Organisation), ஆகிய உறவு மாநாடு (Asian Relations Conference) ஆகியவை இத்தகைய திணைநிலை அமைப்புகளே. ஆனால், இவை பாதுகாப்பு மன்றத்துக்குத் தகவல் அறிவித்தே சமரச முயற்சி செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போர்க்கால எதிரிகள் சார்ந்த ஏற்பாடானால் மட்டும், தகவலறிவிப்பின்றிப் பேச்சு நடத்தலாம்.