பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

231

தனிநாடுகள் ஏற்றுக்கொண்டவை, சர்வதேச வழக்கங்கள், நாகரிக நாட்டின் சட்ட மரபுகள், பல நாட்டுப் புகழ் வாய்ந்த சட்ட நிபுணரின் முடிவுகள் ஆகியவை இவ்வகையில் ஆராயப் படுகின்றன.

மன்றத்தின் தீர்ப்புக்குச் செல்லும் நாடுகளும் அதன் திர்க்கட்சிகளும் ஆகிய இரண்டும் ஐக்கியநாட்டு உறுப்பாயிருந்தால், அதன் தீர்ப்பைக் கட்டாயம் ஏற்க வேண்டும் என்று உரிமை விளம்பரம் கட்டுப்படுத்துகிறது. எந்தக் கட்சியாவது அதனை ஏற்கவோ அதன்படி நடக்கவோ தவறினால், மற்றநாடு அதனைப் பாதுகாப்பு மன்றத்தின் செயலுக்குக் கொண்டு செல்லலாம்.

உரிமை விளம்பரத்தின் கட்டுப்பாடுகளும் தொடர்புடைய நாடுகளின் நல்லெண்ணமும் தவிர, நடுநிலைத் தீர்ப்பு மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாட்டு முறை மன்றங்களின் தீர்ப்புகளுக்குள்ள வலியுறுத்தும் ஆற்றல் பொதுவாக இல்லை.

பொதுப் பேரவையோ, பாதுகாப்பு மன்றமோ, சட்ட நுணுக்கங்களிலும் உரிமை விவாதங்களிலும் மன்றத்தின் அறிவுரை கோரக்கூடும். மற்ற உறுப்புகளும் தத்தம் உரிமைகள் வகையில் பொதுப் பேரவையின் இணக்கம் பெற்று மன்றத்தின் அறிவுரை கோரலாம்.

மன்றத்தின் தீர்ப்பு, மன்றத்தில் வீற்றிருக்கும் நடுவர்களுட் பெரும்பான்மையினர் தீர்ப்பேயாகும். தீர்ப்பு அறிவிப்புகளில் தீர்ப்பில் கலக்கும் நடுவர்கள் பெயரும், தீர்ப்பின் முடிவுக்கான அவர்கள் காரண விளக்கங்களும் குறிக்கப்படல் வேண்டும். எந்த நடுவராவது தம் எதிர்தரப்புக் கருத்தைக் குறிக்க விரும்பினால், குறிக்கலாம்.

தீர்ப்பில்

மன்றத்தின் தலைவரும்

பதிவாளரும் கையொப்பமிட்டபின், இருகட்சியினரின் போராட்டங்களுக்கும் முன் கூட்டி அறிவிக்கப்பட்ட காலத்தில், மன்றப் பொதுவில் அது வாசிக்கப்படவேண்டும்.

மன்றம் தன் தலைவரையும் துணைத் தலைவரையும் மூன்றாண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கிறது.பதிவாளரும் பிற