பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(234

அப்பாத்துரையம் - 10

சமூக பொருளியல் மன்றத்தின் உறுப்பினர் 18 பேர். இவர்கள் மூன்றாண்டுக் காலத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், முதலாண்டில் ஆறுபேர் மூன்றாண்டுக் காலத்துக்கும், ஆறுபேர் இரண்டாண்டுக் காலத்துக்கும், ஆறுபேர் ஓராண்டுக் காலத்துக்குமாகத் தேர்ந்தெடுக்கப் படுவதால், ஆண்டுதோறும் ஆறு பேர் மாறிக்கொண்டே யிருப்பர். ஒரே உறுப்பினர் உடனடியாக மீட்டும் தேர்ந்தெடுக்கப்படலாகும்.

1947-ஆம் ஆண்டில் இம்மன்றத்தில் இருந்த உறுப்புகள் வருமாறு: சிலி, சீனா, நார்வே, பிரிட்டன், பெரு, ரஷ்யா, அமெரிக்கா, கானடா, லெபனான், கொலம்பியா, ஃபிரான்ஸ், இந்தியா, பெல்ஜியம், செக்கோஸ்லவேகியா, உக்ரேன், கியூபா, கிரீஸ், யூகோஸ்லேவியா.

சமூக பொருளியல் மன்றத்துக்குரிய சில சிறப்புப் பண்புகளாவன:

1. நிலையான உறுப்புகளான முதல் மூன்று உறுப்புகளுக்குப் புறம்பே மிகவும் அடிக்கடி கூடும் உறுப்பு இதுவே. இது ஒழுங்காக ஆண்டில் மூன்று தடவை கூடுகிறது. இது தவிர, இம்மன்றக் கூட்டத்திலேயே பெரும்பான்மை உறுப்பினர் விரும்பினாலும், பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர் விரும்பினாலும், பாதுகாப்பு மன்றம் விரும்பினாலும், சிறப்புக் கூட்டங்கள் கூட்ட வேண்டும். முறைப்படி எந்த உறுப்பு நாடோ, இணையுறுப்போ, பொறுப்பாட்சி மன்றமோ விரும்பினாலும், இம்மன்றத்தின் தலைவர் விருப்பத்துக்கு உட்பட்டுச் சிறப்புக்கூட்டம் கூட்டலாம்.

2. இம்மன்றம் நாட்டரசாங்க அமைப்புகளுடனும் நாட்டரசாங்கக் கூட்டமைப்புக்களுடனும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இது தவிர, வேறு எந்த அமைப்பிற்குமில்லாத ஓர் உரிமையும் இதற்கு இருக்கிறது. இது ஒன்றே அரசாங்கச் சார்பற்ற நாட்டமைப்புகளுடனும் சர்வதேச அமைப்புகளுடனும் நெருங்கி ஒத்துழைக்கிறது.

3. இம்மன்றம் உறுப்பு நாடல்லாத நாட்டரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் இணைப்பமைப்பின் ஒத்துழைப்பையும் கோரி அவர்கள் பிரதிநிதிகளைத் தன்விவாதக் கூட்டத்தில் வரவழைக்

கலாம். ஆனால், இத்தகையோர் மொழியுரிமையில்

கலந்துகொள்ளமாட்டார்கள்.