பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

அப்பாத்துரையம் - 10

முற்றுப்பெற்றுவிட்டது நோக்கிக் கலைக்கப்பட்ட உறுப்புகளுக்கு ஐ.நா. துணையுதவிச் சீர்திருத்தக் கழகத்தையும், பல்கிப் பெருகி வளரும் உறுப்புகளுக்குச் சமூக பொருளியல் மன்றத்தையும் எடுத்துக் காட்டுகளாகக் கூறலாம்.

சமூக பொருளியல் மன்றம் தொடக்கத்தில் ஐ.நா. அமைப்பிலுள்ள புதிய உறுப்புகளுள் ஒன்றாகவும், இரண்டாம் படியான உறுப்பாகவுமே பிறப்பிக்கப்பட்டதாயினும், அது உண்மையில் பல உறுப்பு, கிளை உறுப்புகளின் தாயமைப்பாக வளர்ந்து வருகிறது. அதனால் அமைக்கப்பட்டகுழுக்கள் கூடத் தனியமைப்புப்போல வளரத்தக்கவையாயிருக்கின்றன. அவையும் தாயுறுப்பாகிய சமூக பொருளியல் மன்றம் போலவே இயங்கித் தமக்கெனப் பணியாட்களும் பணிமனையும் துணைக்குழுவும் அமைக்கப்பெறும் உரிமையுடையவையாயிருக்கின்றன.

க்குழுக்களுள் தலை சிறந்தது, மனித உரிமைக் குழாமே. இதற்கடுத்தபடி பெண் உரிமை நிலைக் குழாம். மயக்கமருந்துச் சரக்குக் குழாம் ஆகியவை முக்கியமானவை. ஐரோப்பியப் பொருளியல் குழாம், ஆசிய தொலைகிழக்குப் பொருளியல் குழாம் என்னும் இரண்டு திணைநிலைக் குழாங்களும் உண்டு.

க்குழாங்களிலும் இவற்றின் துணைக்குழாங்களிலும் ஐ.நா அமைப்பின் மற்ற எல்லா உறுப்புகளையும்விட மிகுதியான அளவில் இந்தியா பங் கு கொண்டுள்ளது என்பது

குறிப்பிடத்தக்கது.

குழாங்கள், குழுக்கள் ஆகிய உட்கூறுகளேயன்றி, ஐ.நா. அமைப்புடன் பல அமைப்புகள் பல்வகைப்பட்ட தொடர்புறவும் உடைய இணைப்பமைப்புகளாய் இயங்குகின்றன. இவை சிறப்புச் செயலமைப்புகள் (Specialised Agencies) எனப்படுகின்றன. ஓர் அமைப்பு இத்தகைய உறவு நாடினால், அதற்காக அமைப்புடன் மனுச்செய்துகொள்ள வேண்டும். உரிமைநாட்டு விளம்பரத்தை ஏற்றுக்கொள்ளுதல், அமைப்புடன் மொழியுரிமையிற் கலவாத பிரதிநிதிகளைப் பார்வையாளராகப் பரிமாறிக்கொள்ளுதல் முதலிய சில விதிகளுடன் அவ்வமைப்புகள் ஐ.நா.அமைப்புடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும். அதன் பின் சமூக பொருளியல் மன்றம் இவ்வொப்பந்தத்தைப் பேரவையில் கொண்டுசென்று அதன் இணக்கம்பெற்று, இதனை இணைத்துக்கொள்ளும். ஐ.நா.