ஐக்கிய நாடுகளின் அமைப்பு
249
பங்குகள்; மிகக் கூடுதல் அளவு பங்கு வரி 31,750 பங்குகள். கூடுதல் அளவு செலுத்தும் உறுப்பு நாடு அமெரிக்கா. இந்தியா இவ்வகையில் உறுப்பு நாடுகளுள் 5-ஆம் இடம் வகிக்கிறது.
உறுப்பு நாடுகளுக்கு வகுக்கப்பட்ட பங்கு வரிப் பண மூலம் நிதிநிலையத்துக்கு 739,75,00,000 அமெரிக்க வெள்ளி மூலதனம் சேர்ந்துள்ளது. ஒவ்வோர் உறுப்பு நாடும் தன் தங்கச் சேமவைப்பிலிருந்து 100க்கு 10 வீதமோ, அல்லது தன் அமெரிக்க வெள்ளிச் சேமிப்பில் 100க்கு 10 பங்கு வீதமோ, இவற்றில் குறைந்த அளவு தொகையைப் பங்கு வரியுள் தங்கமாகத் தர வேண்டும். மீதியை உறுப்பு நாடுகள் அதனதன் நாணயச் செலாவணி வடிவில் தரலாம்.
இவ்வமைப்பின் நோக்கம், நிலையான அமைப்பு வாயிலாக உலகநாணயத்துறையில் ஒத்துழைப்பு ஏற்படுத்தி, அதனால் உலக வாணிகத்தைச் சரிசமநிலையில் தடைப்படாது வளர்ப்பதும்;
தள
ழியர்கட்கு உயர் ஊதியம் பேணுவதும்; எல்லா உறுப்பு நாடுகளின் வள ஆதாரங்களையும் பெருக்குவதும் ஆகும். அத்துடன் இந்நிலையம் போட்டி மூலம் நாணயமதிப்புக் கெடாமலும், செலாவணி மாற்றுச் சிக்கலின்றி எளிதில் நடைபெறும்படியும், செல்வத் துறையில் உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கை வளரும்படியும் செய்யும்.
சர்வதேச சீரமைப்பு மேம்பாட்டுப் பொருளகம்
(International Bank for Reconstruction and Development)
இதன் தோற்றம் சர்வதேச நாணய நிதி நிலையத்துடன் ஒத்ததே. இது 1947 டிசம்பர் 27 இல் நடைமுறைக்கு வந்தது. இதன் உறுப்பு நாடுகள் 44. பொருளகத்தின் உரிமையற்ற மூலதனம் ஆயிரங்கோடி அமெரிக்க வெள்ளி. இது நூறாயிரம் வெள்ளி மதிப்புடைய பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளகத்தின் நோக்கங்கள் உறுப்பு நாடுகளின் சீரமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும், வளமை தரும் துறைகளுக்கும் முதலீட்டுதவி செய்வது; வெளி நாடுகளில் தனிப்பட்டவர் முதலிடுவதற்கான ஆதரவுகள் தருவது; தனி மனிதர் முதலீட்டுடன் ஒத்துழைத்து வள ஆதாரம் பெருக்குவது;