250 ||-
அப்பாத்துரையம் - 10
நாடுகள்
சர்வதேச முதலீட்டு நிலையால் உறுப்பு பாதிக்கப்படாமலிருக்கப் பார்ப்பது; போர்க்காலப் பொருளாதார நிலையைப் படிப்படியாக எத்தகைய அதிர்ச்சிக்குமிடமின்றி அமைதிக்கால நிலைக்குக் கொண்டு வருவது ஆகியவையே.
பொருளகத்திற்கு ஆட்சியாளர் குழு (Board of Governors), நடைமுறை ஆணையாளர்கள், தலைவர், பணித்துறையாளர் ஆகிய கூறுகள் கூறுகள் உண்டு. ஒவ்வோர் உறுப்பினரும் ஓர் ஆட்சியாளரையும் ஒரு பகர ஆளையும் தேர்ந்தெடுத்தனுப்புவர். உரிமையாற்றல்கள் யாவும் ஆட்சியாளர் குழுவையும், நடைமுறைகள் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆணையாளர்களையும் பொறுத்தவை. ஆணையாளர்களின் தலைவரே முக்கியமான பொறுப்புள்ளவர்.
முதற்பொருளாகத் தலைவர் அமெரிக்காவைச் சார்ந்த ஜான் ஜே மக்கிளாய் என்பவர். பொருளகத்தின் தலைமை நிலையம் வாஷிங்டனில் அமைந்துள்ளது.
உலக உடல் நல அமைப்பு
(World Health Organisation)
இதன் தலைமை நிலையம் ஜெனிவா. இது 1948 ஏப்பிரல் 7இல் ஐ.நா. அமைப்புடன் இணையுறுப்பாயிற்று. இதன் அமைப்புத் திட்டம் 1946 ஜூன் 19 முதல் ஜுலை 22 வரை கூடிய சர்வதேச உடல் நல மாநாட்டினால் வகுக்கப்பட்டது. 51 நாடுகள் இதன் தொடக்க உறுப்புகள்.
உலக மக்களின் உடல் நலத்தை உச்ச அளவுக்குக் கொண்டு வருவது அமைப்பின் நோக்கம். இதற்காக க எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் வருமாறு:
அது
1. சர்வதேச உடல்நலத் தொண்டுகளை ஒருமுகப்படுத்துதல்.
2. அரசாங்கச் சார்பானவை, தொழிற்சார்பானவை, பிற சார்புடையவை ஆகிய எல்லாவகை உடல் நல நிலையங் களுடனும், இவ்வகைத் தொடர்புடைய ய பிற ஐ.நா. இணைப்புக்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.
3. தொற்று நோய், கொள்ளை நோய் நீக்கப் பணிகளை ஊக்குதல்.