பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252

அப்பாத்துரையம் - 10

மேற்கூறப்பட்ட இணைப்புறுப்புகள் தவிர, சர்வதேச அகதிகள் அமைப்பு (International Refugee Organisation), சர்வதேச வாணிக அமைப்பு (International Trade Organisation), உலக வானிலைக்கள அமைப்பு (International Meteorological Organisation), உலகக் கடல் போக்கு வரவுத்துறை ஆராய்வு அமைப்பு (International Maritime Consultative Organisation) ஆகியவைகளும் அமைக்கப்பட்டுச் செயலாற்றி வருகின்றன. இவை இன்னும் முறைப்படி இணைப்புறவைப் பெறவில்லையாயினும், இணைப்புக்கு உரியனவாகக் கருதப்படுகின்றன.

உலக அரசியல் துறை அமைப்பாகத் தொடங்கிய ஐ.நா. அமைப்பு, இங்ஙனம் அரசியல் துறை உறுப்புகளாக அமைந்த பாதுகாப்பு மன்றம், பொறுப்பாட்சி மன்றம், நடுநிலைத் தீர்ப்பு மன்றம் ஆகிய உறுப்புகளுடன், போர் ஒழிப்பு, சமரசம் ஆகியவற்றின் மூலமும், அமைதி, மனித உரிமைப் பிரசாரம் மூலமும் அரசியல் கூட்டுறவை வலுப்படுத்த முனைந்தது. அதன் பின் இறுதியிற்கூறப்பட்ட மனித உரிமையே இவற்றின் அடிப்படை என்பதைக் கண்டு, தனிமனிதன் உரிமையின் முழு மதிப்பைப் பேணித் தனி மனிதன் அவா ஆர்வத்தைத் தூண்டி, அவன் நல்வாழ்வை நிலைநிறுத்த முனைந்து, சமூக பொருளியல் மன்றம் என்னும் தனிப்பெருங்கிளையைத் தோற்றுவித்தது. இம்மன்றம் மரத்தினுள் மரமாக வளர்ந்து, கிளைகளும்

விழுதுகளும் விட்டு, ஒரு தனிப்பேரமைப்பாகப்

பெருக்கமடைந்துள்ளது. புற உடலமைப்பாய் விளங்கும் ஐ.நா. அமைப்பில் இது உடலின் அக உறுப்பு மண்டலமான தசை நரம்பு அமைப்பாக வளர்ந்து வருகிறது. இதனுள்ளும் ஐ.நா.க.வி.ப. கழகம் கிட்டத்தட்ட ஒரு தனி அமைப்பாகி, இவ்வுடலின் உயிர் நிலையாய் வளரத்தொடங்கியுள்ளது. ஐ.நா. அமைப்பின் இம்முத்திற உடலுக்குத் தக்க சூழ்நிலையாக்கங்களாகவே மற்ற இணைப்புறுப்புகள் இயங்குகின்றன.