பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. அமைப்பின் வருங்காலம்

தத்தம் வாழ்வில் கருத்துச் செலுத்தி அதனுடன் அமைந்து நிற்பது பெரும்பாலான தனி மனிதரின் இயல்பு. ஆனால், அதேசமயம்தனிமனிதன்வாழ்வுதனிமனிதன்வாழ்வு ன்என்றும்நின்றுவிடுவதில் ல. ஆராயாத விலங்கு நிலை வாழ்வு வாழ்பவரிடையேகூடத் தனி மனிதர் வாழ்வுடன் நின்று தன்னலம் பேணும் சிறுமனத்தினர்களையும், தன்னலத்தில் அக்கறை குறைந்து பிறர் நலமே எண்ணும் பல திறப்பட்ட அன்பு நெறியாளர், ஊருக்கு உழைப்பவர், புகழ் நாடுபவர், கடவுட்பற்றாளர், ஒழுக்கமுறையாளர், சமயப்பிரசாரகர் ஆகியவர்களையும் காணலாம்.சிந்தனை தொடங்கியவுடன் இவ்விருதிறத்திலும், தனி மனிதன் வாழ்வு, வழிப் போக்கர் விடுதி போன்றதெனக்கூறி வாழ்க்கையில் பற்றற்றவர் ஒரு புறமும்; தனி மனிதன் வாழ்வு பொது வாழ்வின் ஒரு கூறே எனக்கொண்ட அறிஞர், கலைஞர், கவிஞர் ஆகியவர் ஒருபுறமும் தோற்றினர். இவர்களிடையே தனிமனிதன் வாழ்வு கருதியே பொது வாழ்வில் பங்கு கொண்டு பணியாற்றிய பல வகுப்பினர் வணிகர், சமயப் புரோகிதர், அரசியலார், மருத்துவர், காலக் கணிப்பாளர், உழவர், தொழிற்கலைஞர் ஆகியவர் - தோன்றினர். சமூகம் பரந்து, சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் மரபுகள் பெருக்கமடைந்தன.

-

தனி மனிதன் வாழ்வு, பொதுவாழ்வு ஆகியவற்றில் கருத்துச் செலுத்திய இவ்விரு திறத்தவரையும் ஒப்ப, இயற்கை, வாழ்வு ஆ கிய இரு திறங்களில் கருத்துச் செலுத்திய அறிஞர் பலர். இவர்கள் இயல் நூல் (விஞ்ஞான) அறிஞர், வாழ்க்கை அறிஞர் (வரலாற்றறிஞர், கலைஞர், அரசியலறிஞர், பொருளியலறிஞர், அருளாளர்) எனப் பெருகினர். இவர்களுள் ஒவ்வொருவர் முயற்சியாலும் தனி மனிதன் நிலை கடந்த உலகம், உலகவாழ்வு ஆகியவற்றின் எல்லை விரிவடைந்தது.