பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஐக்கிய நாடுகளின் அமைப்பு

263

"ஆயினும், அமைப்பின் உயர்தத்துவம் முழுவதும், அதன் அமைப்பு முறை விளக்கம் முழுவதும் மொத்த உருவில் உலகின் மக்களிடையே செல்வாக்கு மிக்கவர்களும், மக்கள் உள்ளப்பாங்கு களையும் அவர்கள் மொழிப் பாங்குகளையும் முற்ற அறிந்த முப்பெருந்தலைவர்களும் ஆன ஃபிராங்க்லின் டிலானோ ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோஸஃப் ஸ்டாலின் ஆகியவர்களால் உருவாக்கப்பட்டதே. இம்மூவருமே இவர்களைப் பற்றித் தனித்தனி மனிதர் கொண்டுள்ள கருத்து வேறுபாடு எதுவாயினும் தத்தம் நாடுகளில் செய்து முடித்துள்ள அருஞ்செயல்களின் வெற்றி மூலம், தத்தம் நாட்டுப் பொது மக்களிடம் எவ்வாறு பேசுவது என்பதையும், தத்தம் குறிக்கோட் கருத்துகளில் அவர்கள் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது எவ்வாறு என்பதையும் மிகத் திறம்பட அறிந்தவர்களே என்பதை எவரும் மறுக்க முடியாது. உரிமை விளம்பரத்தின் வாசகங்களை முடிவாக உருவாக்கிய செயலாளரும், பிற துணைவரும், யாவரும் பொது வாழ்வின் நெருக்கடிகளாகிய அனலில் நன்கு புடமிட்டுத் தேர்ச்சி பெற்றவரேயாவர். எல்லோருக்கும் விளங்கத்தக்க முறையில் சொற்களைத் தொடுப்பதில் அவர்கள் தேர்ந்தவர்களே. ஐ.நா. அமைப்பின் அமைப்புத் திறமுழுவதிலும் அவர்களது எளிமைத் திறத்தின் வெற்றியைக் காணலாம். பல்வேறு உறுப்புகளின் உரிமையெல்லைப் பகுப்பில் ஓரளவு கூறியது கூறல் குழப்பம் காணப்படலாமாயினும், அமைப்புச்

எந்தநாட்டரசின்

சட்டங்களையும் நோக்க, அது எளிமையிலும் வெற்றிகரமானதே. அரசியலமைப்புச் சட்டங்களுள் சொல்லெளிமைத் திறமிக்கவை எனக் கருதப்படும் அமெரிக்க ஃபிரெஞ்சு அரசியல் அமைப்புச் சட்டங்களைப் பார்க்கிலும் அது எளிமையுடையதே.

66

"அப்படியானால், ஐ.நா. பற்றிய இப்பொதுமக்கள் அறியாமையின் காரணம் யாது?

“உண்மை யாதெனில், முதலாவதாக, பெரும்பாலான மக்களுக்குத் தத்தம் நாட்டின் அரசியல் முறை பற்றியே உருப்படியான தெளிந்த அறிவு இல்லை. இரண்டாவதாக, புதிய அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிப் பத்திரிகைகளும் வானொலிகளும் போதிய அளவில் விளம்பரத்தொண்டு செய்யவில்லை. 'ஐ.நா.' பற்றிய செய்திகளை அவர்கள் கூடிய