ஐக்கிய நாடுகளின் அமைப்பு
265
பெருங்குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, அவர்களை அறைகூவி அழைப்பதாயிருக்கிறது. போர் முயற்சியைத் தலைமை வகித்து நடத்திய நேசநாட்டுத் தலைவர்கள் நேரிடையாகத் தொடர்பு கொண்டுள்ள மேல் நாடுகள் பலவற்றிற்கூட இக்குறைபாடுகள் இருக்கின்றன வென்றால், பொது மக்களைப் பற்றியவரை, அவற்றிலிருந்து இன்னும் எட்டாத் தொலைவிலேயே உள்ள கீழ் நாடுகளின் நிலையைக் கூறவேண்டுவதில்லை. வருங்கால உலகம் மேல் நாட்டுலகாக மட்டும் இருந்துவிடப் போவதில்லை. இருந்துவிடவும் முடியாது. ஜப்பானின் ‘அச்சு வேக வளர்ச்சி' வேறு எதைக் காட்டாவிட்டாலும், இதனைக் காட்டப் போதியது. கீழ் நாட்டு அரசாங்கங்கள் பொதுவாக இன்னும் மக்கள் அரசாங்கமாகவில்லை. மக்கள் தலைவர்களும் இன்னும் போதுமான அளவில் பொது மக்களுடனும், அவர்கள் வாழ்வு தாழ்வுப் பிரச்சினைகளுடனும், அவர்கள் பொருளியல், மொழி மரபுகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. ட்ரிவி லையின் அறைகூவல் அவர்கள் காதுகளுக்குச் சிறப்பான படிப்
னயாகவும் எச்சரிக்கையாகவும் உள்ளது. மேல் நாட்டுத் தலைவர்களும் இதற்கேற்ப உலகக் கவனத்தைக் கீழ் நாடுகளின் மீதும் திருப்புதற்குரியர் ஆவர்.
ஐ.நா. இயக்கம் - மக்கள் இயக்கம் என்பதனை முதன்முதல் உணர்ந்தமக்கள் பிரிட்டன் மக்களே என்னலாம். போர்க் காலத்திலேயே, ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸான் ஃபிரான்ஸிஸ்கோ மாநாட்டில் தீட்டப்பட்டு உரிமை விளம்பரம் உருவாகு முன்பே, வட அயர்லாந்துடன்கூடிய பிரிட்டனின் ஐக்கிய நாட்டுக் கழகமொன்று அமைக்கப்பட்டுவிட்டது. ஐ.நா. செய்திகளை அது உடனுக்குடனே வெளியிட்டுப் பிரசாரம் செய்ததுடன் உரிமை விளம்பரம் பத்திரிகைகளில் அறிவிக்கப்படும்போதே அதனை அச்சிட்டு ஆயிரம் பத்து நூறாயிரக்கணக்கில் விற்பனை செய்து பரப்பிற்று. விரைவில் உறுப்பு நாடுகள் பலவற்றுள்ளும் உறுப்பல்லாத பலநாடுகளிலும் இத்தகைய சங்கங்கள் அமைந்தன. மாணவர்களுக்கென்றும், ஆசிரியர்களுக்கென்றும், மாதர்களுக் கென்றும், பிரசாரக்கிளை உறுப்புகளும், பயிற்சிக்கூடங்களும், விவாதக்குழுக்களும் அமைக்கப்பட்டன. உலகநாட்டு ஐக்கிய நாடுகள் கழகங்கள் பலவும் இணைக்கப்பட்டு, அவ்விணைப்பின் முதலாண்டு விழா ஜெக் நாட்டு முதல்வர் டாக்டர் மசாரிக்குத்