அப்பாத்துரையம் - 10
(266) ||_ தலைமையில் லண்டனில் கூட்டப்பெற்றது. இவ்வைக்கிய நாட்டுக் கழக இணைப்பு ஐ.நா. அமைப்புடன் இணைப்புறவு பெற்று, அதன் பிரசார உறுப்பாய் இருந்து வருகிறது.
அறைகூவலையும்
ஆனால், ட்ரிக்வி லையின் எச்சரிக்கையையும் போலவே, இப்பிரசார அமைப்புப் பற்றிய செய்தியும் கீழ் நாடுகள் வரை வந்து எட்டவில்லை. உறுப்பு நாடுகள் அல்லாத மேல்நாடுகளிற்கூட ஏற்பட்டுள்ள இப்பிரசாரக் கழக அமைப்பு, பிரிட்டிஷ் பொது அரசில் இன்னும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவையோ, பாகிஸ்தானையோ, மற்றக் கீழ் நாடுகளையோ தீண்டவில்லை. இந்நிலை மாற, கீழ் நாட்டு அரசாங்கங்களும், அவற்றின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ந்தியாவின் அரசாங்கமும், இந்தியத் தலைவர்களும் பாடுபட வேண்டும்.
அரசாங்கங்களைக்கடந்து, ஆனால், அவைகளைப் புண்படுத்தாமல், அவற்றின் இணக்கம் பெற்றே, மக்களைச் சென்றெட்டும் ஆர்வத்தினாலேதான், ஐக்கிய நாட்டமைப் பாளர்கள் உறுப்பு நாடுகளின் அரசாங்கச் சார்பான அமைப்பு களுடன் மட்டுமன்றி, அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இத்தொடர்பில் சிற்சில
டங்களில் பெருஞ்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மற்ற யாவரினும் இந்திய மக்கள் நன்கு அறிவார்கள். தென்னாப்பிரிக் காவில் தென்னிந்தியருக்கும் பிற இந்திய மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் மட்டுமன்றி, அக்கண்டத்துக்கே உரிய பண்டைப் பழங்குடியினராக கறுப்பு நீகிரோக்களுக்கும் சரிசம உரிமைகள் மறுக்கப்படுகின்றன. குடியேறியுள்ள வெள்ளையர்களே இந்நாடுகளின் குடிமக்களாக வெள்ளையர் அரசியல் உலகில் கருதப்படுகின்றனர். பழங்குடியினரும் அவர்கள் இனத்தவரான மற்றக் கறுப்புநிறக் குடியேற்ற மக்களும் அவர்களிடம் உரிமை பெறக் கெஞ்ச வேண்டியவர்களாகியுள்ளனர். இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சியும் தன்மான உணர்ச்சியும் ஊட்டிய மகாத்துமா காந்தியடிகள் முதன்முதல் தென்னாப்பிரிக்காவில் உழைத்து அம்மக்கள் தனிமதிப்பையும் தற்சார்பையும் உயர்த்தினராயினும், அரசியலுரிமை வகையில் அவர்கள் ன்னும் பிற்பட்டே யுள்ளார்கள். ஐ.நா. அமைப்பு இந்தியர்