ஐக்கிய நாடுகளின் அமைப்பு
267
குரலையும், ஆப்பிரிக்க நீகிரோக்கள் குரலையும் கேட்கின்ற தாயினும், அதில் செயலாற்றும் உரிமையைப் பெரிதும் பெற முடியவில்லை. ஏனெனில், அதற்குரிய பொறுப்பாட்சி மன்றம் அது வகையில் பெரிதும் உரிமையற்றது. தவிர, வெள்ளை அரசாங்கங்களின் கண்கள், வெள்ளையர் கறுப்பர்
-
வேறுபாட்டிடையே ஒரு வேளை நடுநிலையுணர்வு கொள்ளக் கூடுமாயினும், அது வகையில் மிகுதி ஆர்வம் கொள்ளக்கூடும் என்று கூறமுடியாது. கறுப்பு நீகிரோவர், ஆப்பிரிக்க இந்தியர் ஆ கியவர்களுக்கு நாட்டரசியலிலும் அதன் மூலம் உலக அரசியலிலும் பிரதிநிதித்துவம் ஏற்பட்டாலன்றி, அவர்கள் குரலை உலகம் கேட்க முடியாது; உலகின் கவனம் அவர்கள் பால் செல்லவும் முடியாது.
தென்னாப்பிரிக்காவில் தெளிவுபடக் காணப்படும் இவ்வுண்மை பிற இடங்களுக்கும் உரியதேயாகும் அரசாங்கங்களின் ஒத்துழைப்புடனேயே ஐ.நா. அமைப்புச் செயலில் முனையமுடியும் என்பதை நாம் உணரக் கூடுமானாலும், அரசாங்கத்தின் டையீடு இல்லாமலே அமைப்பு மக்கள் கருத்துரைகளை நேரிடையாக அறியும் வகைகளும், மக்கள் அதனுடன் நேரிடையாகத் தகவல் கருத்து அறிவிக்கும் முறைகளும், அமைப்பில் இடம் பெற வேண்டும். கீழ் நாடுகளில் ஐ.நா. விவாதக் கழகங்களும், இளைஞர் கழகங்களும் அமைந்து, அவற்றின் முடிவை நடுநிலையுடன் வெளியிட்டுக் கூறும் நடுநிலை நோக்குடைய பத்திரிகைகளும் அமைக்கக் கூடுமானால், இத்துறைகள் ஓரளவு செம்மைப் படக்கூடும்.
ஆசியாவையும் இந்தியாவையும் ஐ.நா. இயக்கம் சிறிதும் தொடவில்லை என்பதற்கு இரண்டோர் எடுத்துக்காட்டுகள் கூறலாம். ஆசியாவெங்கும் சிறுதெய்வ வழிபாடு, உருவவணக்கம், மாயமந்திர நம்பிக்கை, சோதிடம், குறி, சூனியம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. குடியும் சூதும் வெறுத்தொதுக்கும் உயர் சமயவாதிகளிடையே, குடியும் சூதும் வறுமைப் பேயின் மேளதாளங்களுக்கிடையே வேறெப் பகுதியையும்விட இங்கே தாண்டவமாடுகின்றன. ஐ.நா. சமூக பொருளியல் மன்றத்திலும் சரி, ஐ.நா.க.வி.ப. கழகத்திலும் சரி, இதன் தற்செயலான