ஐக்கிய நாடுகளின் அமைப்பு
269
மட்டுமே. பெரும்பாலான உலகமக்கள் இந்தியாவென்றால், சமய நம்பிக்கைகளும், பழங்காலப் பழக்கவழக்கங்களும் நிறைந்த பழய உலகப்பரப்பு என்று மட்டுமே கருதிவருகிற இந்த நாளில், வடமொழியின் நல்லிலக்கியங்கூட அவர்களின் இத்தவறான கருத்தைப் போக்கப் போதியதன்று ஏனெனில், நல்லிலக்கியத்தையும் புராண இதிகாசங்களையும் ஒருங்கே இலக்கியமாகத் தரும் வழக்கம் மேனாட்டாசிரியரிடமும் இன்றும் இருந்து வருகிறது. தவிர, நல்லிலக்கிய வகையிலும் வடமொழி இலக்கியம் மக்கள் இலக்கியம் என்று கூற முடியாது. தாய்மொழி இலக்கியங்களே மக்கள் இலக்கியமாகக் காட்சி தரமுடியும். ஆனால், வடநாட்டுத் தாய்மொழிகளோ, இன்றுதான் இலக்கிய வடிவு பெற்று வருகின்றன. இவ்விலக்கிய வடிவும் இக்கால இந்திய வாழ்வையோ, இந்தியமக்கள் வளமைகளையோ, பண்பையோ படம்பிடிக்காமல், வடமொழிப் புராணங்களின் புதுப் பதிப்புக்களாகவே பெரிதும் விளங்குகின்றது. இந்தியாவுக்குரிய தாய்மொழிப் பண்பாட்டைத் தென்னாட்டு மொழிகளும் இலக்கியமும் காட்டத்தக்கவையாயிருக்கின்றன. சிறப்பாகத் தமிழ் இலக்கியம் பொதுவாகவும், பண்டைத்தமிழ்ச்சங்க இலக்கியம் தனிப்படவும். இந்திய நாகரிகச் சிறப்பையும், வளர்ச்சி தளர்ச்சிகளையும் நன்கு எடுத்துக்காட்டுவன வாயுள்ளன. தவிர, அவை கிரேக்க இலக்கியம் போல இன்னும் உலகுக்கு அறிவுக் கலையொளி தருவனவாயும் உள்ளன. திருக்குறள் போன்ற காலங்கடந்த தேசங்கடந்த நூல்கள் இவற்றில் உள்ளன. இன்று ஐ.நா.க.வி.ப. கழகத்தார் சார்பில் உலக நல்லிலக்கியக் கோவையை ஐக்கிய நாடுகளின் உலக மொழிகளில் மொழி பெயர்க்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.திருக்குறளும் பிற சங்க இலக்கிய நூல்களும் இவ்வுலகக் கோவையில்
டம்பெறுவது இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகுக்கே நலம் தருவது. இவற்றின் நலனறிந்து, உலகின் இயக்கங்களுமறிந்து, இவற்றை உலக அரங்குக்கு அளிக்கவல்ல கலையன்பரும், அறிமுகப்படுத்த வல்ல அறிஞரும், ஐ.நா. அரங்கத்தைச் சென்றெட்டும் வகை செய்வது அரசாங்கத்தார், மக்கள் ஆகிய ருதிறத்தார்களுக்குமுரிய கடன். அமைப்பாளரும் நேரிடையாக